‘நான் அவன் அல்ல!”: வாட்ஸ்அப் ஆடியோ குறித்து   அமைச்சர் ஜெயகுமார் விளக்கம்

ளம் பெண் ஒருவரை கர்ப்பமாக்கியது தொடர்பாக அவரது தாயாரிடம் அமைச்சர் ஜெயக்குமார் பேசுவதாக ஒரு தொலைபேசி உரையாடல் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது பெரும் அதிரச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் சற்று நேரம் முன்பு செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார் து குறித்து விளக்கமளித்தார்.

அப்போது அவர் தெரிவித்ததாவது:

“என் மீதுள்ல அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே சிலரால் ஆடியோ வெளியிடப்பட்டுள்ளது. அந்த ஆடியோவில் உள்ளது என்னுடய குரல் அல்ல. என் மீது களங்கம் கற்பிக்கவே போலியான ஆடியோவை வெளியிட்டுள்ளார்கள்

என்னை நேரடியாக எதிர்க்க திராணி இல்லாதவர்கள் போலியான ஆடியோவை தயார் செய்து வெளியிட்டுள்ளார்கள்.

சசிகலா குடும்பத்தையும், தினகரனையும் நான் கடுமையாக எதிர்ப்பதால், என் மீது களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் தவறான ஆடியோவை வெளியிட்டுள்ளார்கள்.

ஆடியோவின் பின்னணியில் உள்ளவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று  ஜெயக்குமார் தெரிவித்தார்

 

 

கார்ட்டூன் கேலரி