Random image

கட்சி விரும்பும் பணியை செய்ய தயார் : பிரியங்கா காந்தி

டில்லி

காங்கிரஸ் செயலர் பிரியங்கா காந்தி காங்கிரஸ் கட்சி விரும்பும் எந்த வித பணியையும் செய்ய தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளர்

காங்கிரஸ் செயலரான பிரியங்க வதேரா காந்தி தற்போது உத்திர பிரதேச மாநிலம் கிழக்கு பகுதியின் பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளார். நடைபெற்று வரும் மக்களவை தேர்தலில் அவர் நாடெங்கும் பல மாநிலங்களில் தேர்தல் பரப்புரை நிகழ்த்தினார். அவர் கலந்துக் கொண்ட கூட்டங்களில் மக்கள் பெருமளவில் கலந்துக் கொண்டு தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர். அவர் சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

அந்த பேட்டியில் பிரியங்கா காந்தி, “நடந்து முடிந்த தேர்தல் பிரசாரத்தில் எனக்கு உத்திரப்பிரதேச மாநிலத்தின் கிழக்கு பகுதியில் முழு பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்த மாநிலத்தில் கடந்த ஐந்து வருட பாக மீது மக்கள் கடும் கோபத்தில் உள்ளதை பார்த்தேன். இதே நிலை நாடெங்கும் உள்ளதாக நான் கருதுகிறேன். அரசு பிரச்னைகளை தீர்ப்பதற்கு பதில் மேலும் உருவாக்கி மக்களை துயரப்படுத்தி வருகிறது.

அரசு கொண்டு வந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை ஆகட்டும், ஜிஎஸ்டி ஆகட்டும், அதில் உள்ள குறைகள் குறித்து விவாதிக்க இந்த அரசுக்கு மனம் வருவதில்லை. இதே நிலை வேலை வாய்ப்பு உருவாகாதல், விவசாயிகள் பிரச்னை ஆகியவற்றிலும் உள்ளது. மொத்தத்தில் பொதுமக்களின் தினசரி நடவ்டிக்கைகள் அனைத்திலும் இந்த அரசு ஏதாவது பிரச்னையை உருவ்க்கி வருகிறது. ஐந்து வருடங்களுக்கு முன்பு அளித்த வாக்குறுதிகளிலிஎதையும் பாஜக அரசு நிறைவேற்றவில்லை.

பாஜக மற்றும் ஊடகங்கள் இணைந்து மோடியின் அரசு பல நன்மைகளை செய்துள்ளதாக ஒரு போலி நம்பிக்கையை உருவாக்கி உள்ளது. ஆனால் உண்மையி பிரதமர் மோடி இந்தியாவின் தற்போதைய சீர்கேட்டுக்கு காரணமான தலைவர் ஆவார். அவர் அனைத்து பிரச்னைகளிலும் தனது பலவீனத்தை வெளிப்படுத்தி உள்ளார். டில்லியில் கூடிய விவசாயிகளை சந்திக்க அவருக்கு தைரியம் இல்லை. ஆனால் அவரை சுற்றி பண முதலைகளை வைத்துக் கொண்டுதன்னை தானே தனிமைபடுத்திக் கொண்டுள்ளார்.

இதுவரை மோடி பொதுமக்களுடன் சேர்ந்து ஒரு புகைப்படமாவது எடுத்துக் கொண்டுள்ளாரா? நான் பார்த்ததெல்லாம் மிக பெரிய கட் அவுட்டுகள், எல் ஈ டி திரைகள் மட்டுமே ஆகும். நூற்றுக்கணக்கான கிமீ தூரத்தில் இருந்து வரும் மக்களால் அவரை சந்திக்க முடிவதில்லை. இதை என்னிடம் பிரதமரின் தொகுதியான வாரணாசியில் உள்ள மக்கள் குறையாக தெரிவித்துள்ளனர். அவர் தனது ரேஸ் கோர்ஸ் ரோடு இல்லத்தை விட்டு வெளிவராமலே தம்மை இந்திய மக்களின் பிரதிநிதி என நம்பி வருகிறார்.

அது மட்டுமின்றி போபால் தொகுதியின் வேட்பாளர் சாத்வி பிரக்ஞா தாகுர் கோட்சேவை குறித்து கூறிய கருத்துக்கள் மூலம் பாஜகவின் பிரிவினை வாதம் வெளி வந்துள்ளது. பிரதமர் மோடி நான் காந்தியை அவமானம் செய்த சாத்வியை மன்னிக்க மாட்டேன் என கூறி உள்ளார். இதற்கு என்ன பொருள்? இது போன்ற கருத்து தெரிவித்தவர் எங்கள் கட்சியின் வேட்பாளர் இல்லை என அவர் கூறவில்லை. ஒரு நாட்டின் பிரதமராக தேசப்பிதாவை அவமதித்தவருக்கு பெயரளவில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

உத்திரப் பிரதேச மாநிலத்தின் காங்கிரஸ் தனது சொந்த பலத்தில் தேர்தலை சந்தித்துள்ளது. எனக்கு தேர்தலில் எத்தனை இடங்களில் வெற்றி பெறுவோம் என ஊகம் சொல்லும் வழக்கம் இல்லை. தற்போது எங்கள் கட்சிக்கு ஆதரவு அளித்துள்ளதால் அது இந்த தேர்தல் முடிவில் எதிரொலிக்கும். பாஜகவை அனைத்து தொகுதிகளிலும் வீழ்த்துவது மட்டுமே எங்கள் குறிக்கோள் ஆகும். அத்துடன் பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாதி கட்சி கூட்டணிக்கும் நல்ல ஆதரவு உள்ளதால் இந்த மாநிலத்தில் பாஜக நிச்சயம் தோல்வியை சந்திக்கும்.

என்னை பொறுத்த வரை எனது குடும்பம் பல தலைமுறைகளாக அரசியலில் புகழ் பெற்றுள்ளதால் அந்த புகழை குலைக்க எனது கணவர் மேல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவதாக நான் கருதுகிறேன். எனது அரசியல் நுழைவுக்கும் அவர் மீதுள்ள வழக்குகளுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. நான் கட்சி பணி புரிய வந்துள்ளேன். எனது கட்சி எனக்கு எந்தப் பணி அளிக்கிறதோ அதை நான் செய்வேன்.

இந்த மக்களவை தேர்தலில் நான் போட்டியிடாததற்கு கட்சி கட்டளை இடாததே காரணம் ஆகும். அதை போலவே அடுத்து வரும் இடைத்தேர்தல்களில் என்னை போட்டியிருமாறு காங்கிரஸ் கட்சி கட்டளை இட்டால் அப்போது நான் போட்டி இடுவேன். நான் மொத்தத்தில் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி எந்த முடிவையும் செய்ய மாட்டேன்” என தெரிவித்துள்ளார்.