சாகும் வரை போரிடுவேன் : பலாத்காரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை குமுறல்

கொச்சி

சுமார் பதினாறு வருடங்களுக்கு முன்பு பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை கன்னியாஸ்திரிக்காக சாகும் வரை போரிடுவேன் என தெரிவித்துள்ளார்.

கடந்த 2003 ஆம் வருடம் ஒரு மைனர் சிறுமி சினிமா மற்றும் தொலைக்காட்சிகளில் வாய்ப்பு அளிப்பதாக ஆசை காட்டி 5 பேரால் பலாத்காரம் செய்யப்பட்டார்.   இதற்கு அவருடைய நெருங்கிய உறவினர்களும் உதவி செய்துள்ளனர்.   இது குறித்து தொடுக்கப்பட்ட வழக்கு அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.   அந்தப் பெண் 2004 ஆம் வருடம் கோட்டயத்தில் ஒரு மருத்துவமனையில் மரணம் அடைந்தார்.

அந்தப் பெண்ணின் தந்தையான சுரேந்திரன் இந்த பலாத்காரக் குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்க மிகவும் போராடி வந்தனர்.  அவர், “என் மகளை சீரழித்தவர்கள் பல ஆண்டு போராட்டத்துக்குப் பின் 10 வருட சிறை தண்டனை பெற்றனர்.   ஆனால் அனைவரும் அடுத்த நாளே மேல் முறையீடு செய்து ஜாமீனில் வெளி வந்துள்ளனர்.” என வருத்தத்துடன் கூறி உள்ளார்.

ஜலந்தர் மறை மாவட்டத்தில் பேராயராக பணி புரியும் பிரான்கோ நிலக்கல் தம்மை 13 முறை பாலியல் பலாத்காரம் செய்ததாக  எழுந்த வழக்கில் பேராயர் இன்னும் கைது செய்யப்படாமல் உள்ளார்.   அதை ஒட்டி கடந்த 13 நாட்களாக கன்னியாஸ்திரிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.   அவர்களுடைய போராட்டத்துக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

தர்போது சுரேந்திரன் பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரிக்கு ஆதரவாக போராட்டத்தில் இறங்கி உள்ளார்.   தமது மகளுக்கு நேர்ந்த அநீதி யாருக்கும் நிகழக்கூடாது என்பதில் தாம் உறுதியாக உள்ளதாகவும் அதற்காக தாம் சாகும் வரை போராட தயாராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.