வங்கிக் கடனை திரும்பச் செலுத்த தயார்!: விஜய் மல்லையா கெஞ்சல்

பொதுத்துறை வங்கிகளிடம் பெற்ற அனைத்துக் கடனையும் திருப்பிச் செலுத்த தயாராக இருப்பதாக தொழிலதிபர் விஜய் மல்லையா தெரிவித்திருக்கிறஆர்.

பல்வேறு பொத்துறைகளில் வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் பெற்ற தொழிலதிபர் விஜய் மல்லையா அதனை திருப்பிச் செலுத்தாமல் லண்டனுக்கு தப்பி ஓடிவிட்டார்.  அங்கு தற்போது வாழ்ந்து வரும் அவர்மீது பல்வேறு வங்கிகள் சார்பில்   வழக்குகள் தொடரப்பட்டன. விஜய் மல்லையாவுக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு, தேடப்படும் குற்றவாளியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளார். அமலாக்கப்பிரி, சிபிஐ நீதிமன்றமும் அவருக்கு தனித்தனியாக கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது.

 

இதையடுத்து அமலாக்கப்பிரிவு, சிபிஐ ஆகியஇரு துறைகளும் சேர்ந்து விஜய் மல்லையாவை இந்தியாவுக்குக் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளன.

இதற்கிடையே ஸ்காட்லாந்து போலீஸாரால் கடந்த வருடம் கைது செய்யப்பட்ட விஜய் மல்லையா மீது லண்டன் வெஸ்ட்மினிஸ்டர்ஸ் அமலாக்கப்பிரிவு, சிபிஐ தரப்பில் வழக்குத் தொடரப்பட்டு நடந்து வருகிறது. இந்த வழக்கில் வரும் ஜூலை 31-ம் தேதிக்குள் மல்லையாவை இந்தியாவுக்குக் கொண்டுவருவது குறித்த தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே  வெளிநாட்டுக்கு தப்பி ஓடியவர்களின் சொத்துக்களை முடக்கும் சட்டத்தின் கீழ் கடந்த வாரம் ரூ.13,900 கோடி சொத்துக்களை அமலாக்கப்பிரிவு முடக்கியது. இதனால், இதுவரை கடனை திருப்பிச் செலுத்துவது குறித்து வாய் திறக்காமலும், வழக்கை நீதிமன்றத்தில் சந்திப்பேன் என்றும் பேசிவந்த விஜய் மல்லையா தற்போது இறங்கிவந்துள்ளார்.

“கடனை திருப்பிச் செலுத்த தயாராக இருக்கிறேன், வங்கிகளுடனான பிரச்சினையை தீர்க்க அனைத்து முயற்சிகளும் எடுத்து வருகிறேன்” என்று அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

பிரதமர் மோடிக்கும், மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லிக்கும் விஜய் மல்லையா எழுதிய கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது:

“நான் கடந்த 2016-ம் ஆண்டு ஏப்ரல் 15-ம் தேதி பிரதமர் மோடிக்கும், நிதி அமைச்சர் அருண் ஜேட்லிக்கும் கடிதம் எழுதினேன் ஆனால், அவர்களிடம் இருந்து எந்தவிதமான பதிலும் எனக்கு வரவில்லை.  இந்தியாவில் எனக்கிருக்கும் சொத்துக்கள் அனைத்தும் விற்பனை செய்வது குறித்து  கர்நாடக நீதிமன்றத்தில் கடந்த 22-ம் தேதி மனுத்தாக்கல் செய்திருக்கிறேன்.

கிங்பிஷர் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்துக்காகப் நான் வங்கியில் பெற்ற ரூ.9 ஆயிரம் கடனை எடுத்துக்கொண்டு நாட்டைவிட்டு ஓடிவிட்டதாக அரசியல்வாதிகளும், ஊடகங்களும் என்மீது குற்றம் சாட்டினார்கள்.  சில வங்கிகள் என்னை  வேண்டுமென்ற கடனை திருப்பிச் செலுத்தாதவர்கள் பட்டியலில் சேர்த்தன.

என் மீது ஏற்றுக்கொள்ள முடியாத பல்வேறு, அப்பட்டமான பொய் குற்றச்சாட்டுகளை அரசு சார்பிலும், வங்கிகள் சார்பிலும் சுமத்தப்பட்டன.  என்னுடைய சொத்துக்கள், என் நிறுவனத்தின் சொத்துக்கள், அனைத்தையும் அமலாக்கப்பிரிவு, வெளிநாட்டுக்குத் தப்பி ஓடியவர்களின் சொத்துக்களை முடக்கும் சட்டத்தின்கீழ் ரூ.13,900 கோடியை முடக்கியுள்ளது.

இப்போது, நான் வங்கியில் கடன்பெற்று திருப்பிச் செலுத்த முடியாதவர்களின் விளம்பரமாக மாற்றப்பட்டு இருக்கிறேன். மக்களின் கோபத்துக்கும் நான் ஆளாகி உள்ளேன்.

நான் மிகுந்த பணிவுடன் கூறுகிறேன், நான் கடன் பெற்ற அனைத்து வங்கிகளுக்கும் பணத்தை திருப்பிச் செலுத்த தயாராக உள்ளேன். ஆனால், அரசியல்ரீதியான தலையீடு இருந்தால் , எதுவும் செய்ய முடியாது” என்று விஜய் மல்லையா தெரிவித்துள்ளார்