பத்ம பூஷன் விருதை திரும்பி அளிப்பேன் : அன்னா ஹசாரே  ஆவேசம்

ராலேகான் சித்தி

ரசு தனது வாக்குறுதிகளை நிறைவேற்றா விட்டால் தமக்கு அளிக்கப்பட்ட பத்மபூஷன் விருதை திரும்ப அளிக்க உள்ளதாக அன்னா ஹசாரே தெரிவித்துள்ளார்

லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா அமைக்கக் கோரி கடந்த புதன்கிழமை முதல் சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே தனது சொந்த ஊரான ராலேகான் சித்தியில் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.  நேற்றுடன் ஐந்து நாட்கள் முடிந்து இன்று ஆறாம் நாள் தொடங்கிய போதும் அரசிடம் இருந்து இது குறித்து எந்த ஒரு விளைவும் உண்டாகவில்லை.

அவருடைய போராட்டத்துக்கு பாஜகவின் கூட்டணி கட்சியான சிவசேனா ஆதரவு அளித்துள்ளது.   அன்னா ஹசாரேவுக்கு ஆதரவாக உள்ளூர் வாசிகள் ஒரு நாள் க்டையடைப்பு போராட்டம் நடத்தினர்.  நேற்று அன்னா ஹசாரேவுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் அந்த பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

நேற்று செய்தியாளர்களிடன் அன்னா ஹசாரே, “உடனடியாக மத்திய் அரசு லோக்பாலை அமைக்க வேண்டும்.   மகாராஷ்டிரா மாநில் அரசு லொக் ஆயுக்தாவை அமைக்க வேண்டும்.   அதுவரை எனது உண்ணாவிரதப் போராட்டம் தொடரும்.  அரசு எனது கோரிக்கைக்கு செவி சாயக்கவில்லை எனில் எனக்கு அளிக்கப்பட்டுள்ள பத்ம பூஷன் விருதை திரும்ப அளிக்க உள்ளேன்” என தெரிவித்துள்ளார்.

கார்ட்டூன் கேலரி