லண்டன்: விண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் எனக்கு இடமளிக்கப்படாததை நினைக்கையில், கோபமாகவும் ஏமாற்றமாகவும் உள்ளது என்றுள்ளார் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட்.
இங்கிலாந்து அணியில் ஸ்டூவர்ட் பிராட் முக்கியமான பந்துவீச்சாளர்களில் ஒருவர். இவருக்கு, தற்போது அந்நாட்டில் நடந்துவரும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதுகுறித்து, தனது உணர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் பிராட்.
அவர் கூறியுள்ளதாவது, “நான் எளிதில் உணர்ச்சிவயப்படக்கூடியவன் அல்ல. ஆனால், இந்த நாட்கள் எனக்கு கடினமாய் இருப்பதாய் தோன்றுகிறது. நான் விரக்தியடைகிறேன், கோபப்படுகிறேன். இப்போது எடுக்கப்பட்டுள்ள முடிவை(டெஸ்ட் போட்டியில் சேர்க்கப்படாத) புரிந்துகொள்வது கடினமாக உள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக நான் நன்றாகப் பந்துவீசினேன். இது எனக்கான இடம் என்று நான் நினைக்கிறேன். உங்கள் அலைபேசி கீழே விழுந்து டிஸ்பிளே போய்விட்டால், உங்களுக்கு ஏமாற்றம் இருக்கத்தானே செய்யும்” என்றுள்ளார் அவர்.