எனக்கு கொரோனா இல்லை, நன்றாக இருக்கிறேன்: வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஜாக்கிசான்

ஹாங்காங்: எனக்கு கொரோனா பாதிப்பு இல்லை, நான் நன்றாக இருக்கிறேன் என்று பிரபல ஹாலிவுட் நடிகர் ஜாக்கி சான் கூறி இருக்கிறார்.

சீனாவில் தோன்றி கொரோனா வைரசினால் அந்நாட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டி உள்ளது. பல்லாயிரக்கணக்கானோர் வைரஸ் தொற்றால் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பிரபல ஹாலிவுட் நடிகர் ஜாக்கிசானும் கொரோனா தொற்றால் அவதிப்பட்டு வருகிறார். அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது, தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் என்று செய்திகள் வெளியாகின.

இதுபோன்ற தகவல்களால் அதிர்ந்து போன ஜாக்கி சான், சமூக வலை தளத்தில் பதிவு ஒன்றை  வெளியிட்டு உள்ளார். அதில், அவர் கூறி இருப்பதாவது;

உங்களின் அனைவரின் அக்கறைக்கும் நன்றி. நான் ஆரோக்கியமாகவும் பாதுகாப்பாகவும் இருக்கிறேன். நான் தனிமை படுத்தப்படவில்லை. அனைவரும் ஆரோக்கியமாகவும் பாதுகாப்பாகவும் இருப்பீர்கள் என்று நம்பிக்கை கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

ஸ்டான்லி டோங் இயக்கிய ஜாக்கி சானின் புதிய திரைப்படம் ‘வான்கார்ட்’ ஜனவரி 25ம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டிருந்தனர், ஆனால் கொரோனா வைரஸ் பாதிப்பால் படத்தின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

 

கார்ட்டூன் கேலரி