சென்னை அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெறும் கருணாஸ்… வீடியோ

சென்னை: திருவாடானை தொகுதி எம்எல்ஏவான நடிகர் கருணாஸ் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக அவர் மருத்துவர்களுடன் எடுத்துள்ள புகைப்படம் தொடர்பான வீடியோ வெளியிட்டு உள்ளார்.

சட்டமன்ற உறுப்பினரும் நடிகருமான  கருணாஸ் கடந்த வாரம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார்.  இதனைத் தொடர்ந்து அவர்  வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டுள்ளார் என்றும் செய்திகள் வெளியானது. இது தொடர்பாக அவரது மகனும் நடிகருமான   கென் கருணாஸ் டிவிட்டரில் அறிவித்து இருந்தார். அப்போது, என்னுடைய அப்பா வுக்கு குரோனா பாசிட்டிவ் என்பது உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும். அவர் அரசியல்வாதி மற்றும் சமூக சேவைகள் செய்து வருகிறார். அவர் தன்னுடைய தொகுதிக்கும் மற்ற இடங்களுக்கும் கடந்த சில தினங்களில் சென்று வந்திருக்கிறார். அதனால் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது. அவர் உடல்நிலை தற்போது சீராக இருக்கிறது. இருப்பினும் மருத்துவமனையில் சேர்த்திருக்கிறோம். நாங்களும் பாதுகாப்பாக இருக்கிறோம் என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், அவர் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து அவர் வீடியோ வெளியிட்டு உள்ளார். அதில், நான் கொரோனா பாதிப்பு காரணமாக, தற்போது சென்னை G.H இல் சிகிச்சை பெற்று வருகிறேன்.  தனக்கு மருத்துவர்கள் அளிக்கும் கவனிப்பு மற்றும் சிகிச்சையால் நான் மெதுவாக & பாதுகாப்பாக மீண்டு வருகிறேன். முதல்வருக்கு எனது மனமார்ந்த நன்றி என்று தெரிவித்து உள்ளார்.

கார்ட்டூன் கேலரி