இலங்கை அரசியலில் குழப்பம்: ‘நானே பிரதமர்:’! ரணில் விக்கிரமசிங்கே

கொழும்பு:

லங்கையில் அதிபருக்கும் பிரதமருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக பிரதமர் ரணில் விக்கிரம சிங்கே அதிரடியாக நீங்கப்பட்டுள்ளார்.  இந்த நிலையில், தன்னை பதவியில் இருந்து நீங்க அதிபர் மைத்திரிக்கு அதிகாரம் இல்லை  என்றும் நானே பிரதமர் என்றும்  நீக்கப்பட்ட ரணில் விக்கிரமசிங்கே கூறி உள்ளார்.   இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ரணி விக்கிரமசிங்கே

இலங்கையில் அதிபர் மைத்திரி பாலசிறிசேனாவுக்கும், பிரதமர் ரணில் விக்கிரசிங்கேவுக்கும் இடையே ஏற்பட்டு வந்த பனிப்போர் மோதலாக மாறியது. இதன் காரணமாக ரணிலை பதவி நீக்கம் செய்தும்,  ராஜபக்சேவை பிரதமராக நியமித்தும்  அதிபர் மைத்திரி உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து ராஜபக்சே பிரதமராக பதவி ஏற்றார்.

இது இலங்கை அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், என்னை பதவியில் இருந்து நீக்க மைத்திரிக்கு அதிகாரம் இல்லை என்று கூறிய ரணில் தானே பிரதமர் என அறிவித்துள்ளார். இதன் காரணமாக இலங்கையில் குழப்பம் நீடித்து வருகிறது.

இலங்கை ஆளும் கட்சியில் பிளவு ஏற்பட்டதையடுத்து தொடர்ந்து இந்த அதிரடி மாற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.  ரணில்விக்ரமசிங்கே இந்தியாவில் 3 நாட்கள் சுற்றுப் பயணம் முடித்து  நாடு திரும்பிய  நிலையில் இந்த அதிரடி மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இதனிடையே பிரதமர் பதவியில் இருந்து தன்னை நீக்க அதிபர் மைத்திரிக்கு எந்த அதிகாரமும் இல்லை என்றும் தானே பிரதமராக தொடர்வதாகவு ம் ரணில் விக்கிரசிங்கே அறிவித்துள்ளார். இதனால் இலங்கையில் அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது.

இது தொடர்பாக மைத்திரி மற்றும் ரணில் ஆகியோர் தனித்தனியாக தங்களது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரம் கோர்ட்டுக்கு செல்ல இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இலங்கை அதிபர் சமீபத்தில் இந்திய உளவுத்துறையான ரா அமைப்பு தன்னை கொல்ல முயற்சி செய்கிறது என்றும், ரா உளவாளிகள் இலங்கை அரசில் ஊடுருவி இருப்பதாகவும் கூறிய நிலையில், ரணில் விக்கிரம சிங்கே அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

You may have missed