கொல்கத்தா:

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ரூ.10ஆயிரம் வழங்குங்கள் என்று பிரதமர்  மோடிக்கு மேற்கு வங்க முதல்வர்  மம்தா வலியுறுத்தி உள்ளார்.

கொரோனா ஊரடங்கால் நாடு முழுவதும் தினக்கூலிகள்,  அமைப்புசாரா தொழிலாளர்கள் உள்பட அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். குறிப்பாக புலம்பெயர் தொழிலாளர்கள் கடுமையான பொருளாதார நெருக்கடிகளுக்கு ஆளாகி உள்ளனர்.

இந்த நிலையில்,  மாநிலத்தில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளைச் சமாளிக்க அமைப்புசாரா துறையில் உள்ளவர்கள் உள்பட ஒவ்வொரு புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் ரூ.10 ஆயிரம் நிதியுதவி வழங்க வேண்டும் என்று மத்திய அரசு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வலியுறுத்தி உள்ளார்.

கொரோனா தொற்றுநோய் காரணமாக கற்பனைக்கு எட்டாத விகிதத்தில் மக்கள் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர். அவர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் நிவாரண உதவி  வழங்குமாறு மத்திய அரசுக்கு  நான் வேண்டுகோள் விடுக்கின்றேன். மேலும் பிரதமர் நிவாரண நிதியின் ஒருபகுதியை இதற்காகப் பயன்படுத்தலாம் என்றும் என்றும் தெரிவித்து உள்ளார்.