சபரிமலை ஐயப்பன் அருளால் முதல்வர் ஆனேன்…குமாரசாமி பெருமிதம்

திருவனந்தபுரம்:

ஐக்கிய ஜனதா தள கட்சி நிகழ்ச்சியில் கர்நாடக முதல்வராக குமாரசாமி கலந்துகொண்டார். பின்னர் கேரள நீர்வளத்துறை அமைச்சர் டி.தாமஸ் உடன் சபரிமலைக்கு சென்றார்.

அப்போது அவர் கூறுகையில்,‘‘ 2005-ம் ஆண்டு ஐயப்பனை தரிசனம் செய்தேன். ஐயப்பன் அருளால் 2006-ம் ஆண்டு முதல்வரானேன். போதுமான உறுப்பினர்கள் இல்லாமலேயே தற்போது மீண்டும் கர்நாடக முதல்வராகியுள்ளேன்.

இதற்கு ஐயப்பன் அருள் தான் முக்கிய காரணம்’’ என்று தெரிவித்தார்.