பழிவாங்கும் அரசியலை கடைப்பிடிக்க மாட்டேன்! எடியூரப்பா

பெங்களூரு:

ழிவாங்கும் அரசியலை கடைப்பிடிக்க மாட்டேன் என்று கூறிய கர்நாடக முதல்வர் பி.எஸ். எடியூரப்பா, பழையதை  மன்னிப்பேன், மறந்து விடுவேன் என்று நம்புகிறேன் என்று தெரிவித்து உள்ளார்.

4வது முறையாக நேற்று மாலை தான் மட்டுமே முதல்வராக பதவி ஏற்ற எடியூரப்பா வேறு எந்தவொரு அமைச்சர்களையும் நியமிக்கவில்லை. அதுபோல, பாஜக முக்கிய  தலைவர்கள் யாரும், அவரது பதவிஏற்பு விழாவில் கலந்துகொள்ளவில்லை. கர்நாடகாவைச் சேர்ந்த பி.எல்.சந்தோஷ் மற்றும் முரளிதர் ராவ் ஆகிய இரு பொதுச்செயலாளர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

இவர்களுட்ன் சமீபத்தில் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த, முன்னாள் காங்கிரஸ் மந்திரி ஆர்.ரோஷன் பேக்கும் விழாவில் கலந்துகொண்டார். மேலும் பாஜக தொண்டர் கள் ஆயிரக்கணக்கில் கலந்துகண்டனர். விழாவுக்கு வந்த விருந்தினர்களை புன்னகையுடன் வரவேற்ற எடியூரப்பா, முன்னாள் காங்கிரஸ் முதல்வரும், தற்போதைய பாஜக உறுப்பினருமான எஸ்.எம்.கிருஷ்ணாவிடம் சில நிமிடங்கள்  உரையாடினார். அதுபோல எடியூரப்பா பதவி ஏற்பு விழாவுக்கு அவரது குடும்பத்தினரும் பெருமளவில் கலந்துகொள்ளவில்லை.

இந்த நிலையில்தான் அவரது பதவி ஏற்பு விழா நடைபெற்றது. அதைத்தொடர்ந்தே தனது தோளில் பச்சை நிறத்துண்டை அணிந்துகொண்டு,கடவுளின் பெயரில் பதவிப்பிரமாணம் எடுத்தார்.  கடந்த முறை பதவி ஏற்கும்போது, விவசாயிகள் மீது சத்தியம் செய்து பதவிப்பிரமாணம் செய்தவர், இந்த முறை அதை தவிர்த்துவிட்டார்.

பதவி ஏற்றதும், தலைமைச்செயலகம் வந்த எடியூரப்பா, அங்கு அனைத்து தறை அதிகாரிகள் கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்தினார். அதன்பிறகே செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, “மறந்து மன்னிக்கும் கொள்கையை நான் நம்புகிறேன் என்று கூறியவர், பழிவாங்கும் அரசியலை கடைப்பிடிக்க மாட்டேன்” என்று  கூறினார்.  வரும் திங்கட்கிழமை, சட்டமன்ற கூட்டத்தொடரை மறுசீரமைத்து,  நிதி மசோதாவை நிறை வேற்றப்படும் என்றவர், நிதி மசோதா ஜூலை 31 க்கு முன்னர் நிறைவேற்றப்பட வேண்டும் என்றார். மேலும்,  சம்பளம் மற்றும் ஓய்வூதியம் உள்ளிட்ட அரசாங்க பணிகள் குறிப்பிட்ட காலத்திற்குள் நடைபெறும் என்று தெரிவித்தார்.

கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் அரசியல் சம்பவங்கள், நீடிக்குமா என்பது அவர் பெரும்பான்மையை நிரூபிப்பதை பொறுத்தே அமைய உள்ளது. வரும் 31ந்தேதிக்குள் எடியூரப்பா பெரும்பான்மை நிரூபித்து காட்டப்பட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

கர்நாடக மாநிலத்தில்,  எஸ். நிஜலிங்கப்பாவுக்குப் பிறகு, நான்காவது முறையாக மாநில முதல்வராக பதவி ஏற்றுள்ளது எடியூரப்பா என்பது குறிப்பிடத்தக்கது.

கார்ட்டூன் கேலரி