கருத்து கணிப்புகள் அனைத்தும் பொய்: சசி தரூர் டிவிட்

திருவனந்தபுரம்:

க்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மை பலத்துடன் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் எக்சிட் போல் எனப்படும் தேர்தலுக்குப் பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகி வரும் நிலையில், இந்த கருத்து கணிப்புகள் எல்லாம் பொய் என காங்கிரஸ் தலைவர் சசி தரூர் விமர்சித்து டிவிட் பதிவிட்டுள்ளார்.

நாட்டில் லோக்சபா தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. கருத்துக்கணிப்புகள் பாஜகவுக்கு சாதகமாகவே வெளியாகி வருவதால், இதில் உள்குத்து இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

இதன் காரணமாக எதிர்க்கட்சி தலைவர்கள் பாஜக மீது கடுமையான குற்றச்சாட்டுக்களை கூடி வரும் நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான சசிதரூர், கருத்துக்கணிப்புகள்  தவறானவை, அதை தான் நம்பமாட்டேன் என்று தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதில், “கருத்து கணிப்புகள் எல்லாம் தவறானவை. ஆஸ்திரேலியாவில் கடந்த வாரம் 56 கருத்து கணிப்புகள் பொய்த்துப் போயின. அதனால் நான் மே 23 வரை காத்திருப்பேன்.

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் கருத்து கணிப்பாளர்களிடம் உண்மையை சொல்ல மாட்டார்கள். ஒருவேளை அவர்கள் அரசாங்கத்தின் ஆளாக இருக்கலாமோ என்ற அச்சத்திலேயே சொல்ல மாட்டார்கள். இந்த கற்பனை எண்களை வைத்துக் கொண்டு விவாதிப்பதைக் காட்டிலும் 23 வரை காத்திருப்பதே மேல்.  எனவேஉண்மையான தேர்தல் முடிவுகள் வரும் 23-ம் தேதி வருகிறது. அதுவரை பொறுத்திருப்போம் ” எனக் கூறியுள்ளார்.

You may have missed