டெல்லி:

ந்தியாவில் கொரோனா பரவலை தடுக்கும் நோக்கில் கடந்த மார்ச்-24ம் தேதி 21 நாட்கள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அன்றைய தினம் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றி, லாக்டவுனை அறிவித்தார்.

அதைத்தொடர்ந்து ஊரடங்கு முடியும்  கடைசி நாளான இன்று பிரதமர் நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார்.

ஏற்கனவே தமிழகம் உள்பட மகாராஷ்டிரா, ஒடிசா, பஞ்சாப், மேற்கு வங்காளம், கர்நாடகா,  தெலுங்கானா  போன்ற மாநிலங்கள் ஏப்ரல் 30 வரை பொது முடக்கத்தை நீட்டிப்பதாக அறிவித்துள்ளன.

இந்த நிலையில் பிரதமர் பொதுமக்களுக்கு உரையாற்றி வருகிறார்.

ஒரு கொரோனா நோயாளி கூட உறுதிபடுத்தாத நிலையில் கூட, கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து வரும் பயணிகளை இந்தியா ஸ்கேனிங் செய்ய ஆரம்பித்தது .

கொரோனாவை ஒழிக்க நாட்டு மக்கள் அனைவரும் இணைந்து போராடி வருகிறோம். நாட்டைக் காப்பாற்ற,பொது மக்கள் கஷ்டங்களை சந்தித்து வருகின்றனர். ஊரடங்கு உத்தரவால் மக்களுக்கு சிரமம் ஏற்பட்டதை என்னால் உணர முடிகிறது  எத்தனை சிரமங்களை எதிர்கொள்கின்றீர்கள் என்பது எனக்குத் தெரியும். கொரோனாவை கட்டுப்படுத்துவதில் மக்கள் அனைவரும் ராணுவ வீரர்கள் போன்று செயல்பட்டு வருகின்றனர்.

இந்த நாட்டு மக்களின் தியாகத்திற்காக நான் மரியாதையுடன் வணங்குகிறேன்.

ஊரடங்கால் நிறைய சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.  அரசியல் சட்டத்தின் வலிமையை நிலைநாட்டுவது, அம்பேத்கருக்கு நாம் செலுத்தும் மரியாதை ஆகும்.

நிறைய பண்டிகைகளை கொண்டாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.  உங்களுடைய வேதனையை நான் உணருகிறேன்.

நாடு முழுவதும் நோய் பரவாமல் இருக்க அனைத்து முயற்சிகளையும் இந்தியா தொடர்ச்சியாக எடுத்து வந்துள்ளது.

இதற்கு சமூக இடைவெளியும், ஊரடங்கும் நமக்கு பெரிதும் உதவியிருக்கிறது என்று மோடி குறிப்பிட்டார்