சுயேச்சை வேட்பாளர் கோபால் சவுத்ரி

லக்னோ,

ட்டமன்ற தேர்தலையொட்டி  உ.பி.யில் தேர்தல் பிரசாரம் களைகட்ட தொடங்கி உள்ளது.

உ.பி. மாநில சட்டசபை தேர்தலில் காங்.-சமாஜ்வாதி கூட்டணி ஒரு அணியாகவும், பா.ஜ.க மற்றொரு அணியாகவும், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி மற்றொரு அணியாகவும் களத்தில் உள்ளனர்.

தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், உ.பி.யில் உள்ள ஆக்ராவின் தென்பகுதியில் சுயேச்சையாக போட்டியிடும் கோபால் சவுத்ரி என்பவர் அதிரடி கருத்துக்களை தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.

அவர் தான் தேர்தலில் போட்டியிடுவது குறித்து கூறியிருப்பதாவது,

இந்த தேர்தலில் வெற்றி பெற்று நான் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டால், அனைத்து வசதிகளையும்  பெற முடியும், அதிக அளவு பணம் சம்பாதிக்க முடியும். வீடுகள் கட்ட முடியும்.

பணம் சம்பாதிக்கவே நான் அரசியலுக்கு வந்திருக்கிறேன், பணம் சம்பாதிப்பதை தவிர எனக்கு வேறு எந்தவித நோக்கமும் கிடையாது என்று வெளிப்படையாக பேசியுள்ளார்.

மேலும் அவர், எனக்கு அரசியல் அனுபவம் கிடையாது, தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, பணம் சம்பாதிப்பது எப்படி என்பது குறித்து அதிகாரிகள் சொல்லித்தர வேண்டும் என்றும் அதிரடியாக கூறியுள்ளார்.

பிரதமர் மோடி 125 கோடி மக்களை ஏமாற்றுகிறார். மக்களை ஏமாற்றவும் திறமை வேண்டும். அவருக்கு சில திறமைகள் உள்ளது. நான் மோடியின் காலடியை தொடர்ந்து வருவேன் என்றும்,

மக்களை எப்படி முட்டாளாக்கி வாக்குகள் பெற வேண்டும் என யோசித்து வருகிறேன் என்றும் அதிரடியாக கூறி உள்ளார்.

இது அங்குள்ள டிஎன்எஸ் செய்தி சேனலில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.