என்னால் போரிட முடியும் ஆனால் வெறுக்க முடியாது : ராகுல் காந்தி

டில்லி

திர்க்கட்சியினருடன் தாம் போரிடுவதாகவும் ஆனால் யாரையும் வெறுப்பதில்லை எனவும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறி உள்ளார்.

நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மான விவாதத்தின் போது பாஜக அரசை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக தாக்கிப் பேசினார்.  தனது குற்றச்சாட்டுக்களை தெரிவித்த பின்பு அவர் மோடியின் இருக்கைக்கு சென்று அவரைக் கட்டித் தழுவினார்.  இது நாடெங்கும் பரபரப்பை உண்டாக்கியது.

நேற்று டில்லியில் கரன் தாப்பர் எழுதிய புத்தக வெளியீட்டு விழாவில் ராகுல் காந்தி கலந்துக் கொண்டார்.  அப்போதுஅவருடன் பாஜகவின் மூத்த தலைவரான அத்வானியும் கல்னதுக் கொண்டார்.  இருவரும் கைகுலுக்கி பேசிக் கொண்டனர்.   அதன் பிறகு இந்த விழாவில் ராகுல் காந்தி உரையாற்றினார்.

ராகுல் காந்தி தனது உரையில், “நான் எதிர்க்கட்சியினருடன் போரிடுவேன்.  ஆனால் யாரையும் வெறுக்க மாட்டேன்.   இதை புரிந்துக் கொள்ள வேண்டும்.   அத்வானிஜி அவர்களின் கருத்தும் என் கருத்தும் முழுமையாக மாறுபட்டது.   அதனால் அவருடன் நான் சண்டையிடலாம்.   ஆனால் வெறுக்க வேண்டும் என அவசியம் இல்லை.

என்னால் அத்வானியுடன் சண்டை இடவும் முடியும்.   அவரைக் கட்டிப்பிடிக்கவும் முடியும்.    ஆனால் பாஜக உறுப்பினர்கள் நான் எதிரில் வந்தாலே 2 அடி பின்னால் செல்கின்றனர்.   அவர்களுக்கு நான் அவர்களை கட்டிப் பிடித்து விடுவேனோ என்னும் பயத்தினால் அவ்வாறு செய்கிறார்கள்” என கூறி உள்ளார்.