இடஒதுக்கீட்டுக்கு எதிராக இருக்கும் மத்திய அரசின் நிலைப்பாட்டை கண்டிக்கிறேன் – ஸ்டாலின்

சென்னை:
“இடஒதுக்கீட்டுக்கு எதிராக இருக்கும் மத்திய அரசின் நிலைப்பாட்டை கண்டிக்கிறேன் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பதிவில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் அவர்களே, அரசு மருத்துவர்களின் தன்னலமற்ற சேவையையும் பொருட்படுத்தாமல், முதுகலை சிறப்பு படிப்புகளில் அவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்கு எதிராக இருக்கும் மத்திய அரசின் நிலைப்பாட்டை வன்மையாகக் கண்டிக்கிறேன்.மத்திய அரசின் திணிப்புகளுக்கு எதிராக நின்று, மாநிலத்தின் அதிகாரத்தையும் தன்னாட்சியையும் தமிழக முதலமைச்சர் அவர்கள் பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.