நடிகர் அஜித்துக்கு தான் பிறந்தநாள் வாழ்த்து கூறவில்லை என அமைச்சர் செங்கோட்டையன் மறுப்பு தெரிவித்து உள்ளார்.

அஜீத் இன்று (மே 1) தனது 47வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அவருக்கு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

அஜீத் பிறந்தநாளுக்கு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், தனது ட்விட்டர் பக்கத்தில்  வாழ்த்து தெரிவித்திருந்தார்.

ஆனால் தற்போது இதனை அமைச்சர் செங்கோட்டையன் மறுத்து உள்ளார்.

நடிகர் அஜித்-க்கு பிறந்தநாள் வாழ்த்து செய்தியை என்னை அறியாமல் எனது ட்விட்டர் பக்கத்தில் போட்டு விட்டனர்  என அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்து உள்ளார்.