சென்னை: “என்னுடைய ராஜதந்திரத்தினால்தான் தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வர முடியாமல் போனது என்று நான் சொல்லவில்லை” என்று  ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலில் திமுக உடன் தேமுதிக கூட்டணி வைக்கும் என்றும் அப்படி நடந்தால் அக்கூட்டணியே வெற்றி பெறும் என்றும் ஒரு கருத்து நிலவியது. இந்த நிலையில் ம.ந.கூட்டணியுடன் தேமுதிக அணி சேர்ந்து தேர்தலை சந்தித்தது. இக் கூட்டணி படு தோல்வி அடைந்ததுடன், தி.மு.க.வும் ஆட்சியை பிடிக்கமுடியாமல் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தது.
download (3)
 
“அதிமுக ஆட்சிக்கு வரர வேண்டும் என்றே வியூகம் அமைத்து வைகோ செயற்பட்டார்” என்கிற விமர்சனம் வைக்கப்பட்டது. இதற்காக  ஜெயலலிதாவிடம் இருந்து 500 கோடி பணம் பெற்றார் என்று தி.மு.க. ஆதரவாளர்கள் பேசி வந்தனர். இந்த புகாரை வைகோ கடுமையாக மறுத்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் திருச்சியில் நடைபெற்ற ம.தி.மு.க. கூட்டத்தில் செயல்வீரர்கள் கூட்டத்தில், “என்னுடைய ராஜதந்திரத்தால்தான் தி.முக. தோல்வி அடைந்தது” என்று பேசியதாக செய்திகள் வெளியாகின.
இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் இன்று வைகோ, “நான் அவ்வாற பேசவில்லை. நான் பேசியதை ஊடகங்கள் திரித்து வெளியிட்டுவிட்டன” என்று தெரிவித்தார்.