40 கோடி இல்லை 400 கோடி கேட்டேன்’  : விஷால் படத்தை நக்கலடிக்கும் மிஷ்கின்

40 கோடி இல்லை 400 கோடி கேட்டேன்’  : விஷால் படத்தை நக்கலடிக்கும் மிஷ்கின்

சினிமா இயக்குநர்கள் உணர்ச்சி வசப்படுவது வாடிக்கை. அதிலும் மிஷ்கினின் கோபம் எப்போதும் மித மிஞ்சியதாகவே இருக்கும்.

வசூல் ரீதியாக வெற்றி பெற்ற தனது ’சைக்கோ’ படத்தையே கலாய்த்த அவர் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

விஷால் நடித்து மிஷ்கின் இயக்கிய ’துப்பறிவாளன்’ வெற்றி அடைந்ததால் அதன்  இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது.

லண்டனில் பல்வேறு பிரச்சினைகளுக்கு இடையே படப்பிடிப்பை முடித்து விட்டு வந்துள்ளது, படக்குழு.

சரியான திட்டமிடல் இல்லாததால் அந்த ஒரு செட்யூலுக்கு மட்டும் 12 கோடி ரூபாய் செலவானதாகக் கூறப்படுகிறது.

இதனால் விஷாலுக்கும், மிஷ்கினுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட அந்த படத்தில் இருந்து விலகிக் கொண்டார், மிஷ்கின்.

எஞ்சிய பகுதிகளை விஷாலே, டைரக்ட் செய்ய உள்ளார். இப் படத்தின் தயாரிப்பாளரும் அவர் தான்.

கருத்து வேறுபாடு ஏற்பட மற்றொரு காரணமும் சொல்லப்படுகிறது.

படத்தை முடிக்க  பட்ஜெட்டில் திட்டமிடப்பட்டதைக் காட்டிலும்,மேலும் 40 கோடி ரூபாய் மிஷ்கின்  கேட்டதால் தான் விவகாரம் வெடித்தாக கூறப்படும் நிலையில்-

இது குறித்து மிஷ்கினிடம் கேட்டபோது அவரும் வெடித்து வார்த்தைகளைச் சிதற விட்டார்.

‘’ இல்லையே.. 40 கோடி கேட்கலையே.. 400 கோடி ரூபாய் தான் கேட்டேன்.’’ என்றவர் அதே கொந்தளிப்புடன் தொடர்ந்தார்.

‘’ படத்தைப் பாதி முடித்து விட்டேன். 100 கோடி செலவாகி விட்டது. மீதி படத்தை முடிக்க 100 கோடி வேண்டும். கிளைமாக்ஸ் காட்சியில் விஷால் ,சேட்டிலைட்டில் இருந்து குதிப்பது போல் ஒரு காட்சியைப் படமாக்க வேண்டும். அதற்கு எப்படியும் 100 கோடி செலவு பிடிக்கும். இது போகக் கூடுதலாக மேலும் 100 கோடி கேட்டேன். மொத்தம் கூட்டி கழிச்சி பார்த்து- 400 கோடி ரூபா மொத்தமா கேட்டேன்’’ என்று நக்கலாகச் சொல்கிறார், மிஷ் ‘’gun’.

– ஏழுமலை வெங்கடேசன்