மும்பை: கோலியின் மனைவி அனுஷ்கா ஷர்மாவை விமர்சித்ததாக எழுந்த குற்றச்சாட்டிற்கு பதிலளித்துள்ளார் சுனில் கவாஸ்கர். தான் அனுஷ்காவை விமர்சிக்கவில்லை என்றுள்ளார் அவர்.

“நான் இதை மீண்டும் ஒருமுறை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். நான், என்னுடைய கருத்தில், அனுஷ்காவை எங்கே விமர்சித்தேன்? நான் அவரை விமர்சிக்கவில்லை. அவர், விராத் கோலிக்கு பந்துவீசியது தொடர்பாக குறிப்பிட்ட வீடியோ குறித்தே நான் பேசினேன்.

இது ஊரடங்கு சமயத்தில் நடைபெற்ற சம்பவம். அதுவும் டென்னிஸ் பந்து அது. மக்கள், விளையாட்டிற்காக செய்யும் நடவடிக்கை அது. அவ்வளவே! மற்றபடி, நான் அனுஷ்காவை எங்கே விமர்சித்தேன்?” என்றுள்ளார் அவர்.

மேலும், தொழில்முறை சுற்றுப்பயணம் செய்கையில், மனைவிகள், கணவர்களுடன் செல்வதை தான் ஆதரிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் அணிக்கு எதிராக, பெங்களூரு கேப்டன் விராத் கோலியின் ஆட்டம் தொடர்பான கவாஸ்கரின் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.