சென்னை:

டை செய்யப்பட்ட குட்காவை, திருட்டுத்தனமாக மாநிலம் முழுவதும் விற்பனை செய்ய லஞ்சம் பெற்றுக் கொண்டு அனுமதி கொடுத்ததாக கூறப்பட்ட புகார் குறித்து சிபிஐ விசாரணைக்கு சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், இந்த 40 கோடி ரூபாய் குட்கா ஊழல் வழக்கில் தொடர்பு இருப்பதாக கூறப்படும் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம், இதுகுறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த அமைச்சர், பொது வாழ்க்கையில் இருப்போர் மீது பொய் வழக்குகள் புனையப்படுவது இயல்பு என டச்சிங்காக பேசினார்.  அவதூறுகள் வரும் போகும் என்றும்,   துடிப்போடு செயல்படுபவர்கள் மீது கூடுதல் வழக்குகள் வருவது இயல்பு என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், இந்த விவகாரத்தில் தனக்கு எந்தவித தொடர்பும் இல்லை என்று மறுத்த அமைச்சர்,  தனக்கு மடியில் கனமில்லை அதனால் வழியில் பயமில்லை என்றும்  கூறினார்.

தமிழக சுகாதாரத்துறையில் உள்ள காலிப்பணியிடங்கள்,  வெளிப்படை தன்மையுடன்  நடைபெறுகின்றன என்றும், சுகாதாரத்துறையில்  காலிப் பணியிடங்கள் இல்லாத நிலையை உருவாக்கியுள்ளோம்.

இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.