தலைமறைவாக வேண்டிய அவசியம் எனக்கு இல்லை: எச்.ராஜா எகத்தாள பேட்டி

திருக்கடையூர்:

ன் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்திருப்பது பற்றி தெரியாது. நான் தலைமறைவாக இருகக வேண்டிய அவசியம் இல்லை பாஜக தேசிய செயலாளர் எகத்தாளமாக கூறி உள்ளார்.

சர்ச்சை புகழ் எச்.ராஜா, சமீபத்தில் காவல்துறை அதிகாரிகள் மற்றும் நீதிமன்றங்களை அவதூறாக பேசிய பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார். இது தொடர்பாக காவல்துறை புகார் பதிவு செய்துள்ளது. மேலும் நீதிமன்றமும் வழக்கு பதிந்துள்ளது.

இதற்கிடையில்,  அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் அவர்கள் குடும்பத்தனர் குறித்து அவதூறாக கருத்து தெரிவித்திருந்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து. மாநிலம் முழுவதும் அறநிலையத்துறை அதிகாரிகளும் ஊழியர்களும் கடந்த வாரம் போராட்டத்தில்  குதித்தனர். பல இடங்களில் ராஜா மீது புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பெண்கள் வன்கொடுமை சட்டம் மற்றும் அவதூறு பரப்பும் வகையில் பேசுதல் ஆகிய பிரிவின் கீழ் நாகர்கோவில் நகரின் கோட்டார் காவல் நிலையத்தில் எச் ராஜா மீது 4 பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று திருக்கடையூரில் செய்தியாளர்களை சந்தித்த, எச்.ராஜா மீண்டும் எகத்தளமாக பேட்டி அளித்துள்ளார்.

தமிழக கோவில்களில் அறநிலையத்துறை அதிகாரிகள் கொள்ளையடித்து வருகின்றனர் என்றும், சுமார்  82% கொள்ளையடித்துள்ளனர் என்று கூறி உள்ளார்.

மேலும், அ சென்னை தீவுத்திடல் பொருட்காட்சியில் உற்சவர் சிலைகளை காட்சிப்படுத்தினர். ஆனால், தாமிரபரணி புஷ்கரத்துக்கு சிலைகளை ஏன் அனுமதிக்கவில்லை ?- என்று அறநிலையத்துறைக்கு  கேள்வி எழுப்பியுள்ள ராஜா, என்மீது புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது குறித்து தெரியாது என்றார்.

நான் ஏன் தலைமறைவாக இருக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பியவர்,  தலைமறைவாக வேண்டிய அவசியம் எனக்கு இல்லை என்றும், எதற்காக  தனிப்படைகள் அமைத்துள்ளது என்பது பற்றி  தனக்கு தெரியாது என்றும் கூறினார்.

தமிழக கோவில்களில் அறநிலையத்துறை அதிகாரிகள் 82% கொள்ளையடித்துள்ளனர் – திருக்கடையூரில் ஹெச்.ராஜா பேட்டி.

சென்னை தீவுத்திடல் பொருட்காட்சியில் உற்சவர் சிலைகளை காட்சிப்படுத்தினர். ஆனால், தாமிரபரணி புஷ்கரத்துக்கு சிலைகளை ஏன் அனுமதிக்கவில்லை ?-

அறநிலையத்துறைக்கு ஹெச்.ராஜா கேள்வி.

தலைமறைவாக வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. தனிப்படைகள் அமைத்துள்ளது எதற்கு என்று தெரியாது – ஹெச்.ராஜா.