சிம்லா,

மாச்சல பிரதேச காங்கிரஸ் எம்எல்ஏ ஆஷா பெண் போலீசை தாக்கியது தவறு என்று ராகுல்காந்தி கருத்து தெரிவித்துள்ளார். மேலும், காங்கிரஸ் எம்எல்ஏவின் செயலை தான் ஒப்புக்கொள்ளவில்லை என்றும், அது தனக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை என்றும் ராகுல்காந்தி கூறி உள்ளார்.

சிம்லாவில்ர  கடந்த வெள்ளிகிழமை, நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல்களில் காங்கிரசின் தோல்வி குறித்து ஆலோசிக்க கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ராகுல்காந்தி கலந்துகொண்டார். இந்த கூட்டத்தில், மூத்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஆசா குமாரி கலந்துகொள்ள வந்தார்.

அப்போது அங்கு அதிக அளவில் காங்கிரசார் திரண்டதால் கூட்டம் அலைமோதியது. இந்நிலையில்,  காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டிய கட்சி அலுவலகத்தில் நுழைய முயன்ற போது, அவரை தடுத்த பெண் போலீசை அவர் கன்னத்தில் அறைந்தார். அதையடுத்து அந்த பெண் போலீசும் ஆஷாவின் கன்னத்தில் அறைந்தார்.

காங்கிரஸ் அலுவலகத்திற்கு வெளியே நடந்த இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

இந்த சம்பவம் பற்றி அறிந்த , ராகுல்காந்தி  ஆஷா குமாரியிடம் விசாரித்தாக கூறப்படுகிறது,

அப்போது, “இந்த சம்பவத்தினால்  நான் மகிழ்ச்சி அடையவில்லை என்ற ராகுல், நான் உங்கள் செயலை ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்றும், காந்தியவாதிகள்  கோபத்திற்கு பதிலளித்த விதம், காங்கிரஸ் கலாச்சாரம் அல்ல என்று கூறினார். மேலும், எவருக்கும் எதிராக கையை உயர்த்துவது நல்லது அல்ல, அதை நான் பொறுத்துக் கொள்ள மாட்டேன், “என்றும் அவர் எச்சரித்ததாக கூறப்படுகிறது.

இதற்கு பதிலளித்த, ஆஷா குமாரி , “கான்ஸ்டபிள் எனக்குத் துரோகம் செய்தார் என்றும், நான் அடையாள அட்டையை காட்டியும் என்னை  கட்சி அலுவலகத்திற்குள் நுழையவிடாமல் தடுக்க முயன்றார். என்னை பிடித்து தள்ளினார்,  அவர் கட்டுப்பாடுடன் இருந்திருக்க வேண்டும் என்றும், அவர் தள்ளியதன் காரணமாக நான் எனது மனநிலையை இழந்து தாக்கிவிட்டேன் என்றும், தவறுக்கு மன்னிப்பு கோரியதாகவும் கூறப்படுகிறது.

இந்த விவகாரம் குறித்து சிம்லாவில் உள்ள சதர் போலீஸ் நிலையத்தில்,  எம்.எல்.ஏ.க்கு எதிரான  ஐபிசி  332 மற்றும் 353 பிரிவுகளில் (கடமையில் ஒரு பொது ஊழியர் மீது குற்றம் சார்ந்த தாக்குதல்) கீழ் போலீசார் பதிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஆணா, “சங்கடமான சம்பவத்திற்கு மட்டுமே என்னை நானே குற்றம் சொல்ல முடியும். முப்பது ஆண்டு எனது அரசியல் வாழ்க்கையில், அத்தகைய சம்பவத்தை நான் ஒருபோதும் சந்தித்ததில்லை. இன்றைய குழந்தைகள் (இளம் போலீஸ்காரர்) பற்றி என்ன சொல்வது, அவர்கள் எங்களுக்கு (மூத்த எம்.எல்.ஏக்கள்) அங்கீகரிக்க மறுக்கிறார்கள். நான் அம்மாவின் வயதில் கிட்டத்தட்ட இருக்க வேண்டும், “என்று அவர் கூறினார்.