புதுடெல்லி: கொரோனா தொடர்பான ஊரடங்கில் தனக்கு நம்பிக்கையில்லை என்றும், அதேசமயம், மருத்துவமனைகளில் படுக்கைகள் பற்றாக்குறை நிலவுவதால், அதன் தேவை ஏற்படலாம் என்றும் கூறியுள்ளார் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்.

தலைநகர் டெல்லியில், கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், அங்கே இரவுநேர ஊரடங்கு உட்பட, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளதாவது, “கொரோனா தடுப்பூசி போடுவதில் வயது வரம்பு விதிமுறைகளை நீக்குவது குறித்து, நான் பலமுறை மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளேன். மக்களுக்கு தடுப்பூசி போடுவதற்காக, வீடு வீடாக பிரசாரம் செய்ய டெல்லி அரசு தயாராக உள்ளது.

டெல்லியில், 65% நோயாளிகள் 35 வயதிற்குட்பட்டவர்களாக உள்ளனர். மருத்துவமனைக்கு செல்வதற்கு முன்பு, அங்கு படுக்கைகள் உள்ளனவா என நமது செயலியில் பார்த்து செல்லுங்கள். அவசரநிலையாக இருந்தால் மட்டுமே படுக்கைகளில் நோயாளிகளை சேர்க்கவும்.

ஊரடங்கில் எனக்கு உடன்பாடு இல்லை. ஆனால், படுக்கைகள் பற்றாக்குறை மற்றும் மருத்துவமனை நிர்வாகத்தின் தோல்வி ஆகியவைகளால் ஊரடங்கு தேவைப்படலாம்” என்றுள்ளார் அவர்.