களத்தில் எதிர்முனையில் எம்.எஸ்.தோனி இருக்கும் போது மறுமுனையில் இருக்கும் வீரருக்கு கவலை தேவையில்லை என்று இந்திய கிரிக்கெட் வீரர் கேதர் ஜாதவ் புகழ்ந்துள்ளார்.

jadhavdhoni020319

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டி நேற்று முன் தினம் நடந்து முடிந்தது. இதில் ஆறு விக்கெட் வித்யாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய அணி வெற்றிப்பெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி வீரர்கள் இந்திய பவுலர்களின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் ரன் எடுக்க திணறினர். இதனால் அந்த அணி 50 ஓவர் முடிவில் 236 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அதனை தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி வீரர்கள் ரோஹித் சர்மா, கேப்டன் விராட் கோலி உள்ளிட்டோர் சொற்ப ரன்களிலேயே ஆட்டமிழக்க, கேதர் ஜாதவ் மற்றும் மகேந்திர சிங் தோனி இறுதி வரை நின்று நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் வெற்றிக்கு உதவினர். இதில் ஜாதவ் 81 ரன்களும், தோனி 59 ரன்களும் எடுத்து உதவினர்.

இந்த போட்டியில் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்ட கேதர் ஜாதவ், “ சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடந்து முடிந்த போட்டி ஒன்றில் இது போன்று சேயிங் செய்தோம். எதிர் முனையில் தோனி இருக்கும் போது, மறுமுனையில் இருக்கும் வீரர் கலைப்பட வேண்டாம். `அவரிடம் இருந்து பல விஷயங்களை கற்றுக் கொண்டேன். மிடில் ஆர்டரில் போட்டியின் தீவிரத்தை கணித்து விளையாட முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனியை விட சிறந்தவர் யாரும் இல்லை. நீங்கள் களத்தில் எதிர்புறம் இருந்து எனக்கு தைரியம் கொடுத்தால் போதும். நான் சிறப்பாக விளையாடுவேன் என தோனியிடம் கூறினேன். கடந்த சில நாட்களாக நான் மேம்பட்டிருப்பதாக உணர்கிறேன்” என கூறினார்.