நீட் மசோதா எங்கே என்று தெரியவில்லை! மத்திய அமைச்சரின் எகத்தாள பதில்

சென்னை,

மிழக சட்டமன்றத்தில் இயற்றி, மத்திய அரசுக்க அனுப்பப்பட்ட நீட்  தேர்வில் இருந்து தமிழக அரசுக்கு விலக்கு கோரும் மசோதா, எங்கே இருக்கிறது என்பதே தெரியவில்லை என்று, தமிழகத்தை சேர்ந்த மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் எகத்தாளமாக பதில் அளித்துள்ளார்.

தமிழக அரசு சார்பாக இயற்றப்பட்ட நீட் தேர்வு விலக்கு குறித்த மசோதா  குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. இதுகுறித்து சென்னை விமான நிலையத்தில் மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமனிடம் செய்தியாளர்கள், தமிழகத்தின் குரலுக்கு மதிப்பளித்து, நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்குமாறு மத்திய அரசை வலியுறுத்துவீர்களா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

தமிழக அரசு நீட்விலக்கு மசோதாவை ஒப்புதலுக்கு அனுப்பியும், அதை மத்திய அரசு குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் நிலுவையில் வைத்திருப்பது ஏன் என்றும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

தற்போது அந்த மசோதா எங்கிருக்கிறது என்று தெரியவில்லை என்றும், விசாரித்து பதில் சொல்வதாகவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

திருப்பூரில் பின்னலாடைத் தொழிலில் ஒவ்வொரு ஜாப் ஒர்க்கிற்கும் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது பற்றி கேட்டபோது, அது பற்றியும் முழுமையாகத் தெரிந்துகொண்டு பதில் சொல்வதாக நிர்மலா சீதாராமன் கூறினார்.

ஏற்கனவே, ஜிஎஸ்டி குறித்து, தொலைக்காட்சி ஒன்றில், கேள்விக்கு பதிலளித்தபோது நக்கலாக வீட்டிலேயே சமைத்தால் வரி கிடையாது என்று கூறி, மக்களின் எதிர்ப்பை சம்பாதித்த இவர்,

தற்போது நீட் மசோதா எங்கே என்பது தெரியவில்லை என்று தமிழக மாணவ மாணவிகளுக்கு எதிராக கருத்து கூறியிருப்பது, மத்திய அமைச்சரின் வாய்க்கொழுப்பையே காட்டுவதாக விமர்சகர்கள் கூறி உள்ளனர்.

அமைச்சரின் எகத்தாளமான பதில்  தமிழர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.