புதுடெல்லி:

பங்களாதேஷ் விவகாரத்தைப் முன்னிறுத்தி, இந்திராகாந்தி வாக்கு கேட்டதாக நினைவு இல்லை என முன்னாள் ராணுவ தளபதி ஜெனரல் சங்கர் ராய் சவுத்ரி கூறியுள்ளார்.


ராணுவ நடவடிக்கைகளை தங்கள் சாதனையாக பிரச்சாரம் செய்யும் பாஜகவுக்கு எதிராக முன்னாள் ராணுவ தளபதி ஜெனரல் சங்கர் ராய் சவுத்ரி உட்பட 150 பேர் கொண்ட குழுவினர் கையெழுத்திட்ட மனுவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்த முன்னாள் ராணுவ தளபதி ஜெனரல் சங்கர் ராய் சவுத்திரி கூறும்போது, பாலக்கோட் தாக்குதலை கூறி வாக்கு கேட்பது தவறு.

பங்களாதேஷ் விவகாரத்தை சொல்லி இந்திரா காந்தி வாக்காளர்களிடம் வாக்குகளை கேட்கவில்லை. இருந்தாலும், பங்களாதேஷ் விவகாரம் இந்திராகாந்திக்கு புகழை தந்தது.

வெற்றி பெற்றால் அரசு பெருமைபடுவதும், தோல்வியடைந்தால் அரசு பொறுப்பேற்காததும் நடக்கும் என்றார். புல்வாமா தாக்குதலை முன்னிறுத்தி வாக்கு கேட்கக் கூடாது என்றார்.