‘‘சிரிப்பதற்கு நான் யாரிடமும் அனுமதி பெற வேண்டியதில்லை’’….ரேணுகா சவுத்ரி

--

பனாஜி: ‛

சிரிப்புக்கு ஜி.எஸ்.டி. விதிக்கப்படாததால் நான் யாரிடமும் அனுமதி கேட்டு சிரிக்க வேண்டிய தேவையில்லை என்று காங்கிரஸ் எம்.பி. ரேணுகா சவுத்ரி தெரிவித்துள்ளார்.

ராஜ்யசபாவில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி பதில் அளித்த பேசுகையில், ரேணுகா சவுத்ரி சத்தமாக சிரித்தார். ராமாயண தொடருக்கு பிறகு நீண்ட சிரிப்பை கேட்கும் வாய்ப்பு கிடைத்தது என்று மோடி தெரிவித்து பெரும் சர்ச்சையானது.

இந்நிலையில் கோவா மாநிலம் பனாஜியில் ரேணுகா சவுத்ரி கூறுகையில், ‘‘ சிரிப்பதற்கு ஜி.எஸ்.டி. விதிக்கப்படவில்லை. எனவே, நான் சிரிப்பதற்கு அனுமதி பெற வேண்டியது கிடையாது. என் மீதான விமர்சனத்தை தொடர்ந்து பெண்கள் விஷயத்தில் மோடி எப்படி குறுகிய மனப்பான்மையுடன் உள்ளார் என்பது தெரிந்துவிட்டது.

இயல்பாகவே சத்தமாக சிரிக்கும் பழக்கம் எனக்கு உண்டு. ஆனால் தற்போது எச்சரிக்கையாக இருக்கிறேன். பெண்களை எப்படி சமமாக நடத்த வேண்டும் என எம்.பி.க்களுக்கு பாடம் நடத்த வேண்டும்’’ என்றார்.