2022க்குள் இந்தியாவில் உள்ள அனைவருக்கும் சொந்தமாக வீடு இருக்கும் – மோடி

2022ம் ஆண்டு இந்தியாவில் வீடு இல்லாத அனைவருக்கும் வீடு கட்டித்தரப்படும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மத்திய அரசின் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம் மூலம் இது செயல்படுத்தப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

Modi

வியாழக்கிழமை குஜராத்தின் வால்சாத் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு பிரதான்மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் மூலம் இலவச வீடுகள் கட்டுப்பட்டு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அதிகாரிகள் பங்கேற்றனர். விழாவை தொடர்ந்து பயனாளிகளுக்கு இலவச வீட்டிற்காக சாவியை பிரதமர் மோடி கையால் வழங்கப்பட்டது.

அதன்பிறகு வால்சாத் மக்களிடையே பேசிய மோடி, “ பிரதான் மந்திரி ஆவா யோஜனா திட்டத்தின் மூலம் கட்டுப்பட்டு வரும் வீடுகள் தரமானதாக உள்ளன. இதற்கு எந்தவித லஞ்சமும் கொடுக்க தேவையில்லை. குஜராத் எனக்கு கற்றுக் கொடுத்த பாடம் ஏராளம். நம் தேசம் 75வது சுதந்திர தினத்தை 2022ம் ஆண்டு கொண்டாடப்படும் போது சொந்த வீடு இல்லாத ஒரு குடும்பம் கூட நம் நாட்டில் இருக்க கூடாது “ என்று தெரிவித்தார்.

இந்நிலையில் மோடி தலைமையிலான பாஜகவின் முடிய இன்னும் ஓராண்டு காலம் உள்ளது. அடுத்த ஆண்டில் நடைபெறும் பொது தேர்தலில் பாஜக வெற்றிப்பெற்றால் ஒழிய மோடியின் இந்த கனவு செயல்படுத்த வாய்ப்பு உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.