‘’தினமும் பசுவின் சிறுநீர் குடிக்கிறேன்’’ – அக்‌ஷய் குமார் வெளியிட்ட தகவல்…

கர்நாடக மாநிலத்தில் உள்ள பந்திப்பூர் புலிகள் சரணாலயத்துக்கு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை அழைத்து சென்று ‘இன் டு தி வைல்ட்’’ நிகழ்ச்சியை நடத்திய பியர் கிரில்ஸ் , அதே காட்டுக்கு இந்தி நடிகர் அக்‌ஷய் குமாரையும் சாகச நிகழ்ச்சிக்கு அண்மையில் அழைத்து சென்றுள்ளார்.

டிஸ்கவரி பிளஸ் ஸ்டீமிங் சேவையில் அந்த நிகழ்ச்சி இன்று (வெள்ளிக்கிழமை) மாலை ஒளிப்பரப்பாகிறது.
இதன் முன்னோட்ட காட்சியில், அக்‌ஷய் குமாரும், கிரில்சும் ,யானையின் கழிவில் இருந்து தயாரான தேநீரை குடித்து பரபரப்பை ஏற்படுத்தி இருந்தனர்.

இந்த நிலையில் அக்‌ஷய்குமாரையும், நடிகை ஹுமா குரேஷியையும் இன்ஸ்டாகிராம் நேரலை நிகழ்ச்சிக்காக, சாகச மன்னன் பியர் கிரில்ஸ் சந்தித்து உரையாடினார்.’

அப்போது ஹுமா குரேஷி ’’இன் டு தி வைல்ட் ‘’ நிகழ்ச்சியின் ’’புரமோவில்’’ யானை கழிவில் இருந்து தயாரிக்கப்பட்ட தேநீரை அக்‌ஷயும், கிரில்சும் குடித்தது குறித்து வியப்புடன் கேள்வி எழுப்பினார்.

அதற்கு அக்‌ஷய் குமார்’’ அது ஒன்றும் பெரிய விஷயமே அல்ல. நான் ஆயுர்வேத மருந்து எடுத்துக்கொள்வதால் தினமும் பசுவின் சிறுநீரை குடிக்கிறேன். அது தெரியுமா?’’ என்று கூறி, அதிற வைத்தார்.

பா.பாரதி.