99 ரன்கள் அடித்தாலும் அதை சதமாகவே உணர்கிறேன்: கிறிஸ் கெய்ல்

அபுதாபி: நான் அடித்தது 99 ரன்கள் என்றாலும், மனதளவில் அதை சதம் என்பதாகவே உணர்வதாக துள்ளளுடன் கூறியுள்ளார் பஞ்சாப் அணியின் அதிரடி மன்னன் கிறிஸ் கெய்ல்.

ராஜஸ்தானுக்கு எதிரான இன்றையப் போட்டியில் 63 பந்துகளில், 8 சிக்ஸர்கள் & 6 பவுண்டரிகள் என மொத்தம் 99 ரன்களை அடித்து, ஒரேயொரு ரன்னில் சதத்தை தவறவிட்டார் கெய்ல்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது, “ஐபிஎல் கோப்பையை வெல்ல வேண்டுமென்று ஆசை எனக்கு. ஆனால், அதற்கு இன்னும் நிறைய தூரம் போகவேண்டியுள்ளது. இளைஞர்களுடன் சேர்ந்து பேட்டிங் செய்வது மகிழ்ச்சியான ஒன்றாக இருக்கிறது.

அதை நான் அனுபவித்து செய்கிறேன். எனது இப்போதைய சந்தோஷம் அதுதான். எனது தன்னம்பிக்கையை நான் கைவிடுவதில்லை. 1000 சிக்ஸர்கள் என்ற சாதனை குறித்து நான் இன்று அறியவில்லை.

நான் இன்று அடித்தது 99 ரன்களே என்றாலும், அதை ரசிர்களோடு இணைந்து, நானும் சதமாகவே உணர்கிறேன். எங்கள் அணி வெற்றிபெற வேண்டும். அதுதான் எனக்கு முக்கியம்” என்றார் கெய்ல்.