டிடிவி கட்சிக்கு வாக்களிக்கும்படி பாஜக தலைவர் சுப்பிரமணியசாமி டிவிட்

டில்லி:

பாரதிய ஜனதா கட்சி அதிமுக கூட்டணியில் உள்ள நிலையில், பாஜகவின் மூத்த தலைவர்களின் ஒருவரான சுப்பிரமணியசாமி, அதிமுகவுக்கு எதிரான டிடிவி தினகரன் கட்சிக்கு வாக்களிக்குமாறு டிவிட் போட்டுள்ளார். இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாரதியஜனதா கட்சி உள்ளது. இரு கட்சியினரும் இணைந்து தங்களது தேர்தல் பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றனர். இந்த நிலையில், பாஜக தலைவர்  சுப்பிரமணியசாமி வில்லங்கமான டிவிட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில், தனது தலைமையிலான விராத் இந்து சபையினரோடு கலந்து ஆலோசிக்கப்பட்டதாகவும், அதில் எடுத்த முடிவுபடி, தமிழகத்தில் உள்ள தேசியவாதிகள், தினகரன் தலைமையிலான அமமுகவிற்கு வாக்களிக்க வேண்டும் என்றும், தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் ஊழல் கட்சிகள் என்று கூறியுள்ளவர், தேசிய ஒற்றுமைக்கு தினகரனே நல்லவர் என்றும் கூறி உள்ளார்.

சுப்பிரமணியசாமியின் டிவிட்  சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Amma Party of Dinakaran, Subramaniasamy
-=-