டில்லி:

ர்எஸ்எஸ்ஸும், பாஜகவும், கடவுளை விரும்பவில்லை… கோட்சேவைத்தான் விரும்பு கிறார்கள் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டிவிட் செய்துள்ளார்.

தமிழகத்தில் அரவக்குறிச்சி தொகுதி தேர்தல் பிரசாரத்தின்போது மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், கோட்சேதான் நாட்டின் முதல் தீவிரவாதி, அவர் இந்து மதத்தை சேர்ந்தவர் என் கூறினார். இந்த விவகாரம் நாடு முழுவதும் சர்ச்சையை கிளப்பிய நிலையில், பாஜகவினர் மட்டுமல்லாது இந்து அமைப்பினரும் கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பாஜக உறுப்பினரான மாலேகான் குண்டுவெடிப்பு குற்றவாளி என அறிவிக்கப் பட்டவரும், தற்போது போபால் தொகுதியில் பாஜக வேட்பாளராக களமிறக்கப்பட்டு இருப்பவரு மான  பெண் சாமியாரினி சாத்வி பிரக்யாசிங் தாகூர், மகாத்மா காந்தியின் படுகொலை விவகாரத்தில்,  நாதுராம் கோட்ஸே “தேசபக்தன்” என்று புகழ்ந்து கருத்து தெரிவித்திருந்தார்.

இது மேலும் சர்ச்சையை கிளப்பிய நிலையில், பாஜக தலைமை, இது அவரது சொந்த கருத்து என்று தெரிவித்ததுடன்,  அவரை உடடினயாக மன்னிப்பு கோர உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து பிரக்யாசிங் பகிரங்கமாக  மன்னிப்பு கோரினார்.

இந்த நிலையில், அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி, இந்த விவகாரம் குறித்து டிவிட் பதிவிட்டுள்ளார்.

அதில்,

எனக்கு பாஜக மற்றும் ஆர் எஸ் எஸ் பற்றிய முடிவு தெரிந்துள்ளது.
 
அவர்கள் கடவுளை விரும்பவில்லை

ஆனால் கோட்சேவை விரும்புகின்றனர் 

இவ்வாறு தெரிவித்து உள்ளார்.