‘ஐ ஃபார் இந்தியா’ ஆன்லைன் இசை நிகழ்ச்சி மூலம் ரூ.52 கோடி நிவாரண நிதி….!

பாலிவுட்டின் முன்னணி நட்சத்திரங்கள் பங்கேற்ற ‘ஐ ஃபார் இந்தியா’ என்ற ஆன்லைன் இசை நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை (03.05.20) அன்று நேரலையில் நடத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் ஏ.ஆர்.ரஹ்மான், ஆமிர் கான், ஷாரூக் கான், ஐஸ்வர்யா ராய், பிரியங்கா சோப்ரா, ஹ்ரித்திக் ரோஷன், அக்‌ஷய் குமார் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் கலந்துகொண்டனர். இவர்களுடன் வில் ஸ்மித், ப்ரையன் ஆடம்ஸ், ரஸ்ஸல் பீட்டர்ஸ் உள்ளிட்ட வெளிநாட்டுப் பிரபலங்களும் கலந்துகொண்டனர்.

4 மணிநேரம் நடந்த ஆன்லைன் இசை நிகழ்ச்சியின் மூலம் இதுவரை ரூ.52 கோடி நிவாரண நிதி கிடைத்துள்ளதாகவும், இன்னும் தொடந்து நிதி வந்துகொண்டிருப்பதாகவும் கரண் ஜோஹர், அக்‌ஷய் குமார், கரீனா கபூர் ஆகியோர் தங்கள் சமூக வலைதளப் பக்கங்களில் தெரிவித்துள்ளனர்.