பூட்டான் பிரதமருடன் மிகவும் சிறப்பான சந்திப்பு! ராகுல்காந்தி டிவிட்

டில்லி:

ந்தியா வந்துள்ள பூட்டான் நாட்டு பிரதமர் அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தியை  இன்று சந்தித்து பேசினார்.

நமது நாட்டின் அண்டை நாடான பூட்டான் நாட்டின் பிரதமராக டாக்டர் லோடே ஷெரிங் (Dr Lotay Tshering) இருந்து வருகிறார். இவர் 3 நாட்கள்  அரசு முறை பயணமாககடந்த 27ந்தேதி இந்தியா வந்தார். இந்த நிலையில் இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை சந்தித்து பேசினார்.

இதுகுறித்து தனதுடிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராகுல்காந்தி, பூட்டான் பிரதமருடனான சந்திப்பு மிகவும் சிறப்பானதாக இருந்தது. இருவரும் தற்போதைய அரசியல் நிலவரங்கள் மற்றும் பொதுவான நிகழ்வுகள்  குறித்து விவாதித்தோம். இந்த சந்திப்பு எதிர்காலத்திலும் தொடரும்… என்றும் கூறி உள்ளார்.

இந்தியா மற்றும் பூடான் இடையேயான உறவின் பொன்விழா ஆண்டை சிறப்பிக்கும் வகையில் பூட்டான் பிரதமர் இந்தியா வருகை தர வேண்டும் என்று பிரதமர் மோடி ஏற்கனவே வேண்டு கோள் விடுத்திருந்தார். இந்த நிலையில் இந்தியா வந்த பூட்டான் பிரதமர், இரு நாட்டின் நல்வுறவு,  போக்குவரத்து மற்றும் வணிகம் குறித்து பேச்சு வார்த்தை நடத்தினார். அதைத் தொடர்ந்த,   குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு பிரதமர் மோடி  மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ்  ஆகியோரை சந்தித்து பேசியிருந்த நிலையில் இன்று ராகுல்காந்தியை சந்தித்து பேசினார்.

Photos Credit: Rahul Gandhi’s Twitter page