‘அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம்’ என்ற பெயரில் அரசியல் கட்சி பதிவு செய்ய விண்ணப்பித்துள்ளேன்! எஸ்.ஏ.சந்திரசேகரன்

சென்னை: ‘அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம்’ என்ற பெயரில் அரசியல் கட்சியை பதிவு செய்ய விண்ணப்பித்துள்ளேன்  என நடிகர் விஜய்-ன் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன் தெரிவித்து உள்ளார். நடிகர் விஜய் கட்சி பெயரை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ததாக செய்திகள் பரவிய நிலையில், தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.