டிரம்ப் சைவ உணவு சாப்பிடுவாரா? ஆச்சரியத்தில் வாயை பிளந்த உதவியாளர்

டெல்லி:

மெரிக்க அதிபர் டிரம்ப்  சைவ உணவு சாப்பிடுவதை நான் இதுவரை பார்த்ததில்லை” என்று இந்தியாவில் டிரம்ப்-க்கு பரிமாறப்பட்ட உணவு மெனுவில் இறைச்சி இல்லாமல் சைவ உணவாக இருந்தது குறித்து டிரம்பின் உதவியாளர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனல்ட் டிரம்ப் வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போது குறிப்பாக சவுதி அரேபியா அல்லது சிங்கப்பூர் சென்ற போது அவரை மகிழ்விக்கும் வகையில் அவருக்கும் பிடித்தமான இறைச்சி உணவுகளே பரிமாறிப்பட்டது. தற்போது இந்தியா வந்துள்ள அவருக்கு சைவ உணவுகள் பரிமாறப்பட்டது.

வழக்கமாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சமைக்கப்பட்ட இறைச்சி உணவுகள், பர்கர்கள் மற்றும் இறைச்சி ரொட்டி போன்ற உணவுகளையே சாப்பிடுவார். இந்த வாரம் மூன்று இந்திய நகரங்களுக்கு பயணம் மேற்கொள்ள தயாரகும் போதோ, உணவு விஷயத்தில் எப்படி சமாளிப்பது என்று யோசிக்க தொடங்கி விட்டார். இந்தியாவில் அவர் பயணம் செய்யும் குஜராத், ஆக்ரா மற்றும் டெல்லி ஆகிய இடங்களில் அதிகளவில் இந்து மக்கள் வசிக்கின்றனர். இதுமட்டுமின்றி இங்கு வசித்து வரும் இந்து மக்களால், மாடுகள் புனிதமானவை என்று போற்றப்படுகின்றன. மேலும் சில இடங்களில் பொது இடத்தில் வைத்து இறைச்சி சாப்பிடுவது தடை செய்யப்பட்டுள்ளது.

உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் விளையாட்டரங்கை திறக்க இந்தியா வந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு, பிரதமர் மோடி பெரியளவிலான வரவேற்பை அளித்தார். இதுமட்டுமின்றி தாஜ் மகாலை டிரம்ப் சுற்றி பார்க்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.  ஆனால், பிரதமர் மோடி சைவ உணவை விரும்பி சாப்பிடுவார். அதனால், அமெரிக்க அதிபருக்கும் சைவ உணவை பரிமாற முடிவு செய்தார்.

டிரம்ப்பின் இந்த சுற்றுபயணத்தில் போது பொது மக்களை சந்திப்பதால், அவரது உணவு மெனு கடைசி நிமிடத்தில் இறுதி செய்யப்பட்டு சைவ உணவாக இருக்கும்படி மாற்றப்பட்டது. ஏனென்றால், டிரம்ப் வெளிநாட்டு பயணத்தின் போது தினமும் இரண்டு வேளை இறைச்சி உணவுகளை சாப்பிடுவார் என்பதால், டிரம்ப்பின் உதவியாளர்கள் இந்த உணவு விஷயத்தில் தலையிட்டு, அதை மாற்றும் படி கேட்டு கொண்டனர்.

ஆனாலும், டிரம்ப்க்கு சைவ உணவுகளே பரிமாறப்பட்டது. இந்த உணவில் குஜராத்தின் உள்ளூர் பாரம்பரிய உணவுகளான சமோசா, ஐஸ் டீ, கீரின் டீ, பிஸ்கட்டுகள் போன்றவை இடம் பெற்றிருந்தது. இந்த உணவுகளை உணவுகளை முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, முன்னாள் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, திரை பிரபலங்களான அமிதாப் பச்சன் மற்றும் ஷில்பா ஷெட்டிஆகியோருக்கு உணவு சமைத்துக் கொடுத்த மூத்த சமையல் கலைஞர் சுரேஷ் கன்னா தயாரித்திருந்தார்.

இதுகுறித்து அமெரிக்க அதிபர் டிரம்பின் நெருக்கிய உதவியாளர் தெரிவிக்கையில், அவர் சைவ உணவை சாப்பிடுவதை நான் இதுவரை பார்த்ததில்லை, என்று கூறியுள்ளார்.