சுப்பிரமணி
சுப்பிரமணிஒருவரும்,  நாமக்கல் ஒப்பந்தக்காரருமான சுப்பிரமணியன்  தற்கொலை செய்து கொள்வதற்கு முன் எழுதிய  கடிதம் சிக்கியுள்ளதாக காவல்துறை  வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் தமிழ்நாடு எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி ஆகியோரின் வீடுகளில் மற்றும் அவர்களுக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த ஏப்ரல் 7ஆம் தேதி அதிரடி சோதனை நடத்தினர்.

பிணமாக..

அதே போல, மைச்சர் விஜயபாஸ்கருக்கு மிகவும் நெருக்கமான  நாமக்கல்லில் அரசு மருத்துவக்கல்லூரி கட்டட ஒப்பந்ததாரர் சுப்பிரமணியன்   வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.
இந்நிலையில் கடந்த 8 ஆம் தேதி நாமக்கல் அருகே உள்ள மோகனூரில் சுப்பிரமணியன்  இறந்த நிலையில் கிடந்தார்.

ஆரம்பத்தில் அவர் மாரடைப்பால் மரணமடைந்ததாக தகவல்கள் வெளியாகின. பிறகு அவர்  தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியானது. ஆனால், அவர், கொலை செய்யப்பட்டுள்ளார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

விஜயபாஸ்கர்

சுப்பிரமணியின் மரணம் குறித்து காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில், தற்போது அவர் கைப்பட எழுதிய கடிதம் ஒன்று சிக்கி உள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. அந்த கடிதத்தில், “ அமைச்சர் அமைச்சர்  விஜயபாஸ்கருக்கும் எனக்கும் தொடர்பில்லை” என்று சுப்பிரமணி  எழுதியுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், தனது, தற்கொலைக்கு சக கான்ட்ராக்டரான பி.எஸ்.கே. தென்னரசு தான் காரணம் என்றும் சுப்ரமணியம் எழுதியிருப்பதாக  காவல்துறை வட்டாரம் தெரிவிக்கிறது.