எனக்கு கொரோனா இல்லை: அமைச்சர் கே.பி. அன்பழகன் விளக்கம்…

சென்னை:

“எனக்கு கொரோனா இல்லை; நான் மருத்துவமனையிலும் இல்லை; தனிமைப்படுத்தபடவும் இல்லை; எனக்கு காய்ச்சல் சரியாகி விட்டது!” என்று தமிழக  உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்து உள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமடைந்துவரும் நிலையில்,  ஏராளமான பொதுமக்கள் மட்டுமின்றி  தமிழக முதல்வரின் தனிச்செயலாளர் தாமோதரன் உள்பட காவல்துறை அதிகாரி, மருத்துவர்கள், செவிலியர்கள் என பலர் பலியாகி உள்ளனர்.

மெலும் பல உயர்அதிகாரிகள், எம்எல்ஏக் களும் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். இந்த நிலையில், தமிழக அமைச்சர் கே.பி.அன்பழகன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், சென்னை தனியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் கடந்த 2 நாட்களாகவே தகவல்கள் பரவி வருகின்றன.  நேற்று இரவு அதை உறுதிப்படுத்தும் வகையில் பல ஊடகங்களும் செய்தி வெளியிட்டன.

இந்த நிலையில், விளக்கம் அளித்துள்ள உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன்,  தானக்கு எந்த கொரோனா அறிகுறியும் இல்லை. முழு உடல் நலத்துடன் வீட்டில்தான் இருக்கிறேன் என்று மீண்டும் விளக்கம் அளித்துள்ளார்.

“எனக்கு கொரோனா இல்லை; நான் மருத்துவமனையிலும் இல்லை; தனிமைப்படுத்தபடவும் இல்லை; வாரத்திற்கு ஒரு முறை கொரோனா சோதனை மேற்கொண்டு வருகிறேன், எனக்கு காய்ச்சல் இருந்ததால் மருத்துவமனை சென்று வந்தேன், தற்போது  சரியாகி விட்டது!”  என்று தெரிவித்து உள்ளார்.