தனக்கு அரசியல் ஈடுபாட்டில் ஆர்வம் கிடையாது: தமிழிசைக்கு அஜித் பதில்

சென்னை:

னக்கு அரசியல் எண்ணம் கிடையாது என்று தெரிவித்துள்ள அஜித், அரசியல் சார்ந்த எந்த ஒரு வெளிப்பாட்டையும் நான் தெரிவிப்பதில்லை என்றும்,  என் ரசிகர்களும் அவ்வாறே இருக்க வேண்டும் என விரும்புகிறேன் என்றும் அஜித் அறிக்கை மூலம் தமிழக பாஜக தலைவர் தமிழிசைக்கு அஜித் பதில் தெரிவித்து உள்ளார்.

ஏற்கனவே கடந்த 2010ம் ஆண்டு பாசத்தலைவருக்கு பாராட்டு விழா என்று திமுக தலைவர் மறைந்த கருணாநிதிக்கு நடைபெற்ற பாராட்டு விழாவுக்கு தன்னை வற்புறுத்தி வரவழைத்ததை, கருணாநிதி முன்னிலையிலே மேடையில் பேசி பரபரப்பை ஏற்படுத்தியவர் அஜித் குமார்.

தற்போது, அஜித் ரசிகர்கள் பாஜகவுக்கு ஆதரவாக செயல்படுவர் என தமிழிசை கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.

திருப்பூரில் நடைபெற்ற பாஜக நிகழ்ச்சியில் அந்த பகுதியை சேர்ந்த சில அஜித் ரசிகர்கள், பாஜக தலைவர் தமிழிசை முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர். இதைத்தொடர்ந்து அவர்களை வரவேற்று பேசிய தமிழிசை,  “திரைப்பட கலைஞர்களிடையே நேர்மையானவர் அஜித். தான் சம்பாதித்த பணத்தை மக்களுக்காக செலவு செய்ய நினைப்பவர். அவரைப் போலவே அஜித்தின் ரசிகர்களும் நல்லவர்கள். அதனால் தான் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளனர்” என்றும்,  இனிமேல் அஜித் ரசிகர்கள் மோடியின் திட்டங்களை மக்களிடையே கொண்டு செல்ல வேண்டும் என்றும்,  தமிழகத்தில் தாமரையை மலரச் செய்ய வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.

தமிழிசையின் அஜித் குறித்த பேச்சு சமூக வலைதளங்களில் வைரலானது.  நடிகர் அஜித் பாஜகவிற்கு மறைமுகமாக துணைபோகிறாரா என கேள்வி எழுந்தது. இது தொடர்பாக கடுமையான விமானங்கள் எழுந்தன.

இந்த நிலையில், தனது நிலை என்ன என்பது குறித்து அஜித் பரபரப்பு அறிக்கை வெளியிட்டு உள்ளார்.  அதில்,

‘நான் தனிப்பட்ட முறையிலோ அல்லது நான் சார்ந்த திரை படங்களில் கூட அரசியல் சாயம் வந்து விடக்கூடாது என்பதில் மிகவும் தீர்மானமாக உள்ளவன் என்பது அனைவரும் அறிந்ததே. என்னுடைய தொழில் சினிமாவில் நடிப்பது மட்டுமே என்பதை நான் தெளிவாக புரிந்து வைத்து இருப்பதே இதற்கு காரணம். சில  வருடங்களுக்கு முன்னர் என் ரசிகர் இயக்கங்களை நான் கலைத்ததும் இந்த பின்னணியில் தான். என் மீதோ, என் ரசிகர்கள் மீதோ, என் ரசிகர்கள் இயக்கங்களின் மீதோ எந்த விதமான அரசியல் சாயம் வந்து விட கூடாது என்று நான் சிந்தித்ததின் சீரிய முடிவு அது.

என்னுடைய இந்த முடிவுக்கு பிறகு கூட சில அரசியல் நிகழ்வுகளுடன் என் பெயரையோ, என் ரசிகர்கள் பெயரையோ சம்மந்தப் படுத்தி ஒரு சில செய்திகள் வந்து கொண்டு இருக்கிறது. தேர்தல் வரும் இந்த நேரத்தில் இத்தகைய செய்திகள் எனக்கு அரசியல் ஆசை வந்து விட்டதோ என்ற ஐயபாட்டை பொது மக்கள் இடையே விதைக்கும்.

இந்த தருணத்தில் நான் அனைவருக்கும் தெரிவிக்க விழைவது என்ன வென்றால் எனக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அரசியல் ஈடுபாட்டில் எந்த ஆர்வமும் இல்லை. ஒரு சராசரி பொது ஜனமாக வரிசையில் நின்று வாக்களிப்பது மட்டுமே எனது உச்சக்கட்ட அரசியல் தொடர்பு.

நான் என் ரசிகர்களை குறிப்பிட்ட ஒரு கட்சிக்கு ஆதரவு அளியுங்கள் என்றோ, வாக்களியுங்கள் என்றோ எப்பொழுதும் நிர்பந்தித்தது இல்லை, நிர்ப்பந்திக்கவும் மாட்டேன். நான் சினிமாவில் தொழில் முறையாக வந்தவன். நான் அரசியல் செய்யவோ, மற்றவர்களுடன் மோதவோ இங்கு வரவில்லை. என் ரசிகர்களுக்கும், அதையேதான் நான் வலியுறுத்துகிறேன்.

அரசியல் சார்ந்த எந்த ஒரு வெளிப்பாட்டை நான் தெரிவிப்பதில்லை. என் ரசிகர்களும் அவ்வாறே இருக்க வேண்டும் என விரும்புகிறேன். சமூக வலைத்தளங்களில் தரமற்ற முறையில் மற்ற நடிகர்களை, விமர்சகர்களை வசை பாடுவதை நான் என்றுமே ஆதரிப்பதில்லை. நம்மை உற்று பார்க்கும் இந்த உலகம் இத்தகைய செயல்களை மன்னிப்பதில்லை.

அரசியலில் எனக்கும் தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு உண்டு, அதை நான் யார் மீதும் திணிப்பது இல்லை, மற்றவர்கள் கருத்தை என் மேல் திணிக்க விட்டதும் இல்லை. என் ரசிகர்களிடம் இதையேதான் நான் எதிர்பார்க்கிறேன். உங்கள் அரசியல் கருத்து உங்களுடையதாகவே இருக்கட்டும். என் பெயரோ, என் புகைப்படமோ எந்த ஒரு அரசியல் நிகழ்விலும் இடம் பெறுவதை நான் சற்றும் விரும்புவதில்லை.

எனது ரசிகர்களிடம் எனது வேண்டுகோள் என்னவென்றால் நான் உங்களிடம் எதிர்பார்ப்பது எல்லாம் மாணவர்கள் தங்களது கல்வியில் கவனம் செலுத்துவதும், தொழில் மற்றும் பணியில் உள்ளோர் தங்களது கடைமையை செவ்வனே செய்வதும், சட்டம் ஒழுங்கை மதித்து நடந்துக் கொள்வதும், ஆரோக்கியத்தின் மீது கவனம் வைப்பதும், வேற்றுமை கலைந்து ஒற்றுமையுடன் இருப்பது, மற்றவர்களுக்கு பரஸ்பர மரியாதை செலுத்துவதும், ஆகியவை தான். அதுவே நீங்கள் எனக்கு செய்யும் அன்பு.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பாஜக-வுடம் அரசியல் தொடர்பு மட்டும் அல்ல, எந்த தொடர்பும் இல்லை., என உறுதிபடுத்தினார் நடிகர் அஜித்குமார்!

இதுவரை எந்தவொரு பொது நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ள அஜித்குமார், கருணாநிதிக்கு திரையுலகினர் நடத்திய

இந்நிலையில் தற்போது இதுதொடர்பாக அஜித் வசம் இருந்து அதிரடி அறிக்கை வெளிவந்துள்ளது.

அதில், “ரசிகர்கள் அனைவரும் அவரவர் வேலைகளை பார்க்க வேண்டும். எனக்கும் விருப்பம் வெறுப்புகள் உள்ளன. அதை உங்கள் மீது திணிக்க மாட்டேன். உங்கள் அரசியல் கருத்து உங்களுடையதாகவே இருக்கட்டும்.

என் பெயரோ என் புகைப்படமோ எந்த ஒரு அரசியல் நிகழ்விலும் இடம் பெறுவதை நான் சற்றும் விரும்பவில்லை” என பல கருத்துகளை கூறியுள்ளார்.

இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது…

அதில்,  ஒட்டுமொத்த சினிமாத்துறைக்கும், அன்பான ரசிகர்களுக்கும் வணக்கம்! இங்கே… இப்போ.. ஐந்தரை அடி தமிழ்நாட்டை நம்ம முன்னாடி ஐயா முதல்வர் அவர்கள் உருவத்துல பார்க்கிறோம். சினிமாத்துறையை சேர்ந்தவர்களுக்கு நிலம் கொடுத்தற்காக பாராட்ட நாங்க இங்கே வரலை. அப்படி வந்திருந்தா அது சுயநலம். 60 வருஷத்துக்கும் மேல தமிழ்நாட்டுக்காகவும், தமிழ் மக்களுக்காகவும், அவரோட வாழ்க்கையை அர்ப்பணிச்சுக்கிட்ட ஒரு மாபெரும் மனிதருக்காகத்தான் நான் வந்திருக்கேன். நாங்‌கெல்லாம் வந்திருக்கோம். சூரியனை வாழ்த்த வயசு தேவையில்லை. இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்துல சூரியனுக்கு வாழ்த்தி நன்றி சொல்லியிருக்காரு. ஒவ்வொரு பொங்கலுக்கும் தமிழ்நாட்டுல சூரியனுக்கு பொங்கல் வெச்சு நன்றி சொல்றோம். அதனால திரையுலக சூரியன், நம்ம அய்யா முதல்வர் பல்லாண்டு வாழணும்னு வாழ்த்தி, நன்றி சொல்றேன். நன்றி!

ஐயா.. இன்டஸ்ட்ரில (சினிமாத்துறையில்) எல்லோரும் எவ்‌ளோ உழைக்கிறோம்னு உங்களுக்கு தெரியும். கொஞ்ச நாளா எல்லாருக்கும் சினிமா இன்டஸ்ட்ரி மேல ஒரு கோபம். ஏன் நாமெல்லாம்… நமக்கு தேவையில்லா விஷயத்துல தலையிடுறோம்னு கோபம். அதுக்கு நாங்க… நடிகர்கள் மட்டும் காரணம் கிடையாது. நீங்க எவ்ளோ பிரச்னைகளை சால்வ் பண்ணிருக்கீங்க. இன்னிக்கு ஒரு பணிவான வேண்டுகோள். இனிமே சென்சிட்டிவ் இஷ்யூஸ், பொலிட்டக்கல் இஷ்யூஸ்ல இன்டஸ்ட்ரி தலையிட வேண்டாம்னு ஒரு அறிக்கை விடுங்க. ப்ளிஸ்… கெஞ்சிக் கேட்டுக்கிறேன். ஒவ்வொரு முறையும் இஷ்யூஸ் வர்றப்ப இன்டஸ்ட்ரில பொறுப்புல இருக்குற ஒரு சிலர் எங்களை எப்படியாவது கலந்துக்க வெக்கிறாங்க. அதனாலதான் நாங்க வர்றோம். சினிமா இன்ஸ்ட்ரி ஒரு பொதுவான இன்டஸ்ட்ரியா இருக்கணும். அதுக்கு ஒரு வழி காட்டுங்க அய்யா. வி ஆர் டயர்ட்.

ஒரு பிரச்னை வரும்போது அரசாங்கம் ரீ-ஆக்ட் பண்றதுக்குள்ளேயே… இன்டஸ்ட்ரில பதவில இருக்கிற ஒரு சிலர் அறிக்கை விட்டுடுறாங்க. நாங்க ஊர்வலம் எடுக்கப் போறோம்னு அறிக்கை விடுறாங்க. பதவில இருக்கிற ஒரு சிலர், நடிகர்கள் எல்லாரும் கலந்துக்கணும்னு சொல்லி மிர‌ட்டி வர வைக்கிறாங்க. அதுக்கு ஒரு முடிவு கட்டுங்க அய்யா. வராவிட்டா ஒத்துழைப்பு தரமாட்டோம்னு மிரட்டுறாங்கய்யா. முடிங்கய்யா. அதுக்கு ஏதாவது ஒரு வழி பண்ணுங்க. அதுக்கு பயந்து வரவேண்டியிருக்கு. சப்போஸ்… வராவிட்டால்… அத வேற மாதிரி திசை திருப்பி தமிழ் பற்று இல்லைனு கிளப்பி விடுறாங்க. ப்ளீஸ் ஹெல்ப் இன்டஸ்ட்ரி. வேண்டாம். எங்களுக்கு அரசியல் வேண்டாம். பொது விஷயங்கள்ல தலையிடணுமா வேண்டாமான்னு நீங்க ‌சொல்லுங்கய்யா. அதுல இன்டஸ்ட்ரி தலையிட வேண்டாம். தண்ணீ பிரச்னைய பார்த்துக்கிறதுக்கு அரசாங்கம் இருக்கு. நீங்க பாத்துக்குவீங்க. காவிரி பிரச்னையில் எங்களைப் போன்ற நடிகர்களால் என்ன செய்ய முடியும். யார் ஆட்சிக்கு வருகிறார்களோ அவர்களை அனுசரித்துத்தான் செல்ல முடியும். மக்கள் பிரச்சனைக்காக போராடுபவர்களை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள். அவர்கள் போராடுவார்கள். நடிகர்களை நடிக்க விடுங்கள். அரசியலையும், சினிமாவையும் ஒண்ணு சேர்க்காதீர்கள். நாங்க நிம்மதியா வேலை செய்யணும். ஏதாவது பண்ணுங்கய்யா. நாங்க டயர்டா இருக்கோம்.

இவ்வாறு அஜித் பேசிய பேச்சுதான் இன்று தமிழ் திரையுலகையே புரட்டிப் போடும் அளவுக்கு சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.<b

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்

Tags: Ajith's answer to bjp Tamilisai, AjithKumar, bjp leader, I have no interested, political involvement, tamilisai soundarajan, அஜித் குமார், அஜித் ரசிகர்கள், அரசியல் ஈடுபாடு, தமிழிசை, பாஜக