ரிசர்வ் வங்கி கவர்னர்களுடன் ஒத்த கருத்து ஏற்படவில்லை: அருண்ஜெட்லி ஒப்புதல்

டில்லி:

னது பதவி காலத்தில்,  ரிசர்வ் வங்கியின் 2  கவர்னர்களுடன் தனக்கு ஒத்த கருத்து ஏற்பட வில்லை என்றும், ஆனால் அவர்களுடன் உறவு சிறப்பானதாக இருந்தது  நிதி அமைச்சர் அருண்ஜெட்லி கூறி உள்ளார்.

பாஜக மத்திய அரசில் பதவி ஏற்றதும், நாட்டின் தன்னாட்சி பெற்ற உயர்ந்த அமைப்பான ரிசர்வ் வங்கி, தேர்தல் ஆணையம், சிபிஐ, உச்சநீதி மன்றம் போன்ற துறைகளில் மூக்கை நுழைத்து வருகிறது. இதன் காரணமாக அதிகார மோதல்கள் ஏற்பட்டு, பல உயர் அதிகாரிகள் மோடி அரசுக்கு எதிராக தங்களது பதவிகளை தூக்கி எறிந்து வருகிறார்கள்.

ரிசர்வ் வங்கி நிர்வாகத்தில் பாஜக அரசு தலையிடுவதாகவும், ரிசர்வ் வங்கிக்கு தெரியாமலேயே நாட்டில் பண மதிப்பிழப்பு அமல்படுத்தப்பட்டதால்தான், ஏராளமான பிரச்சினைகள் உருவான தாகவும் குற்றம் சாட்டப்பட்டது.  அதைத்தொடர்ந்து ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் தனது பதவியை உதறினார். இந்த நிலையில், தற்போதைய ரிசர்வ் வங்கி கவர்னரான உர்ஜித் பட்டேலும் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

உயர் அதிகாரிகள் தொடர்ந்து விலகி வருவது உலக நாடுகளிடையே இந்தியாவின் மீதான நம்பிக்கையை இழந்து வருவதாக கூறப்பட்டது

இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி, ரிசர்வ் வங்கி கவர்கள் விலகி வருவது குறித்து தெரிவித்தார்.

அப்போது,   நாட்டிற்கு ரிசர்வ் வங்கி மிகவும் முக்கியமானது. அதன் தன்னாட்சி எது என்பது சட்டத்தில் வரைமுறை செய்யப்பட்டுள்ளது என்றார். தற்போது நாட்டில்,  ஏராளமான சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனால், கிராமப்புற இந்தியா மற்றும் ஏழை மக்கள் பயனடைந்துள்ளதாக கூறினார்.

மேலும்,  முன்னாள் பிரதமர்கள் நேரு, இந்திரா, நிதி அமைச்சர் சிதம்பரம் காலத்திலும் அவர்கள், பல ரிசர்வ் வங்கி கவர்னர்களை பதவி விலக சொல்லியிருக்கிறார்கள் என்றவர், நான் இரண்டு கவர்னர்களுடன் இணைந்து செயல்பட்டுள்ளேன். அவர்களுடன்  ஒத்த கருத்து ஏற்படாவிட்டாலும், உறவு சிறப்பானதாக இருந்தது என்று தெரிவித்தார்.

இதுபோன்ற விவகாரங்களிலும் ராகுலும், அவரது ஆதரவாளர்களும் தனிநபர் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்,  இதில் மோடியின் தாயார், தந்தை மற்றும் எனது குழந்தைகளை கூட விடவில்லை. தனிப்பட்ட தாக்குதலில் நம்பிக்கை இல்லை.

இவ்வாறு நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறினார்.