தமிழக முதல்வராகும் எண்ணம் சிறிதும் இல்லை : கனிமொழி

--

சென்னை

மிழக முதல்வராகும் எண்ணம் தமக்கு இல்லை என திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி கூறி உள்ளார்.

திமுக தலைவர் மு கருணாநிதி கடந்த ஆகஸ்ட் மாதம் 7 ஆம் தேதி மறைந்தார்.  அதன் பிறகு அவர் மகன் மு க ஸ்டாலின் திமுக தலைவராகி உள்ளார்.    கருணாநிதியின் மற்றொரு மகனான அழகிரி ஏற்கனவே மத்திய அமைச்சராக பொறுப்பு வகித்தவர் ஆவார்.   அரசியலில் இருந்து குடும்ப தகராறு காரணமாக விலகி இருந்த அழகிரி மீண்டும் திமுகவில் சேரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

கருணாநிதியின் துணைவியின் மகளான கனிமொழியை முன்னிறுத்தி சமூக வலை தளங்களில் பலர் பதிவிட்டு வருகின்றனர்.   நேற்று சென்னையில் ஒரு மகளிர் தொடர்பான நிகழ்வில் மாநிலங்களவை உறுப்பினரான கனிமொழி கலந்துக் கொண்டார்.   அபோது அவரிடம் செய்தியாளர்கள் பல கேள்விகளை எழுப்பினர்.

கனிமொழி அந்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில், ”எனக்கு தமிழகத்தின் முதல்வராகும் எண்ணம் சிறிதும் இல்லை.   டில்லி அரசியல் எனக்கு பழக்கமானது என்பதால் எனது எண்ணம் முழுவதும் டில்லி அரசியலில் மட்டுமே உள்ளது.    தற்போது அரசியலில் ஆண்கள் ஆதிக்கம் மிகவும் அதிகமாக உள்ளது.  அதை மாற்ற திமுகவில் பெண்களுக்கு அதிக அளவில் பதவிகள் வழங்க வலியுறுத்துவேன்” என தெரிவித்தார்.