நான் கிறிஸ்துவ மதத்தில் சேரவில்லை : வைகோ விளக்கம்

சென்னை:

தான் கிறிஸ்துவ மதத்தில் சேரவில்லை என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, குடும்பத்துடன் கிறிஸ்துவ மதத்தில்  சேர்ந்துவிட்டதாக, சேகிறிஸ்துவ மத பிரசாரகர்  மோகன் சி. லாசரஸ், பேசிய வீடியோ ஒன்று கடந்த சில நாட்களாக சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இது குறித்து தற்போது வைகோ விளக்கம் அளித்துள்ளார். ஆங்கில இந்து நாளேட்டுக்கு அவர் அளித்த பேட்டியில், தான் கிறிஸ்துவ மதத்தில் சேரவில்லை என்று வைகோ மறுத்துள்ளார்.

தான் தினமும் இரு முறை பைபிள் படிப்பதாக மோகன் கூறியிருந்த்தையும் அவர் மறுத்தார்.

மேலும், “நான் எல்லா மதங்களையும் நான் மதிக்கிறேன். என்னுடைய மருமகள் பூஜை அறையில் அனைத்து கடவுள் படங்களும் இருக்கின்றன” என்றார்.