சென்னை:

ந்து தீவிரவாதம் குறித்து பேசிய மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசனுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், இன்று திருப்பரங்குன்றத்தில் பிரசாரம் மேற்கொண்டு வரும் கமல், நான் யாரையும் சண்டைக்கு இழுக்கவில்லை என்றும், எனது பேச்சை முழுமையாக புரிந்து கொள்ள வில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளார்.

அரவக்குறிச்சி தேர்தல் பிரசாரத்தில் முதல் இந்து தீவிரவாதம் குறித்து பேசிய கமல்மீது ஏராளமான புகார்கள் குவிந்தது மட்டுமின்றி இந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இதன் காரணமாக கடந்த 2 நாட்களாக போலீஸ் பாதுகாப்புடன் சென்னையில் முடங்கிய கமல், இன்று பலத்த பாதுகாப்புடன் திருப்பரங்குன்றத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட தோப்பூரில் பிரசாரத்தை தொடங்கிய கமல், அங்குள்ள மக்ககளிடம் வாக்கு கேட்ட நிலையில், தனது கருத்து தவறாக  எடுத்துக்கொள்ளப்பட்டது என்றும், எனது பேச்சை முழுமையாக புரிந்துகொள்ளவில்லை, நான் யாரையும் சண்டைக்கு இழுக்கவில்லை என்று கூறனார்.

கூடி வாழ்ந்தால் தான் நன்மை என ஒவ்வொரு படங்களிலும் கூறி வருகிறேன் என்று கூறிய கமல், தீவிரவாதத்திற்கான அர்த்தத்தை புரிந்து கொள்ள வேண்டும், தீவிர அரசியலில் இறங்கியதால், தீவிரமாகத் தான் பேசுவேன், தீவிரவாதத்திற்கான அர்த்தத்தை புரிந்து கொள்ள வேண்டும்,நான் பேசியது சரித்திர உண்மை, உண்மையே வெல்லும் என்று பேசினார்.