பெங்களூரு: கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் குமாரசாமிக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதை அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரியப்படுத்தி உள்ளார்.

நாடு முழுவதும் கொரோனாவின் 2வது அலை தீவிரமாக பரவி வருகிறது. கர்நாடக மாநிலத்திலும் தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  மாநிலத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை  11,24,509 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 10,03,985 பேர் குணமடைந்துள்ள நிலையில், 13,190 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதைய நிலையில்,  1,07,334 பேர் சிகிச்சையில் உள்ளனர்.  இதுவரை  67,05,031 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், மதசார்பற்ற ஜனதாதளம் தலைவரும், முன்னாள் முதல்வருமான எச்.டி.குமாரசாமிக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவிட் பதிவில், கொபரோனா சோதனை மேற்கொண்டேன். அதில் தனக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது.  கடந்த சில நாட்களாக என்னுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட அனைவருமே தங்களை தனிமைப்படுத்தி சோதனைக்கு உட்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.