டெல்லி:

ன்றுதான் எங்களுக்கு நீதி கிடைத்தது.. இந்த நாள் நாட்டின் மகள்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டு உள்ளது என்று  நிர்பயா தாயார் ஆஷாதேவி கண்ணீர் மல்க கூறினார்…

கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம், டெல்லியைச் சேர்ந்த மருத்துவ மாணவி, நிர்பயா ஓடும் பேருந்தில் ஒரு கும்பலால் பாலியல் வன்கொடுமை, சாலையில் தூக்கி வீசப்பட்டு, பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளையே அதிர்ச்சிக்குள்ளாக்கின. இந்த  கொடுமையைச் செய்த குற்றவாளிகளை தூக்கிலேற்ற வேண்டும் என்று நாடு முழுவதும் பெண்கள் அமைப்பினர் மட்டுமின்றி பொதுமக்களும் ஆவேசம் அடைந்தனர்.

சுமார் 8 ஆண்டுகால சட்ட போராட்டங்களைத் தொடர்ந்து, இன்று அதிகாலை 5.30 மணிக்கு குற்றவாளிகள் 4 பேரும் தூக்கிலிடப்பட்டு, சாகடிக்கப்பட்டனர்.

இந்த சட்டப்போராட்டத்தை கையில் எடுத்து விடாப்படியாக நீதிமன்றங்களின் படியேறி, தனது மகளின் அநிநாய சாவுக்கு நீதி பெற்றவர், நிர்பயாவின் தாயார் ஆஷாதேவி… இரவு பகல் பாராது, ஒவ்வொரு விசாரணையின்போது, நீதிமன்றத்தில் ஆஜராகி என்ன நடக்கிறது என்பதை உன்னிப்பாக கவனித்து, விரைவில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தருவதிலும் ஆவேசமும், ஆர்வமும் காட்டி வந்தார். இன்று அதிகாலை 3 மணி அளவில் நடைபெற்ற இறுதி விசாரணையின்போதும் கலந்துகொண்டார்…

குற்றவாளிகள் 4 பேருக்கும் திகார் சிறையில் இன்று அதிகாலை 5.30 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பேசிய ஆஷா தேவி,  தூக்கு  தண்டனை குறித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய நிர்பயாவின் தாய் ஆஷா தேவி, இறுதியாக நீர்பயாவுக்கு மட்டுமல்ல, கற்பழிப்பு போன்ற கொடூரமான குற்றங்களுக்கு இரையாகிவிட்ட அனைத்து பெண்கள் மற்றும் பெண்களுக்கும் நீதி வழங்கப்பட்டுள்ளது என்றார்.

இது ஒரு நீண்ட போராட்டமாகும். இன்று எங்களுக்கு நீதி கிடைத்தது, இந்த நாள் நாட்டின் மகள்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. நான் நீதித்துறை மற்றும் அரசாங்கத்திற்கு நன்றி கூறுகிறேன்…

எங்கள் மகள் இன்று இல்லை & திரும்பி வரமாட்டாள். அவர் எங்களை விட்டு வெளியேறிய பிறகு நாங்கள் இந்த  சட்டப் போராட்டத்தை தொடங்கினோம், இந்த போராட்டம் அவருக்காகவே இருந்தது, ஆனால் எதிர்காலத்தில் எங்கள் மகள்களுக்காக இந்த போராட்டத்தை தொடருவோம். நான் என் மகளின் படத்தை கட்டிப்பிடித்து ‘இறுதியாக உனக்கு  நீதி கிடைத்தது’ என்றேன்