தே.மு.தி.க மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் சேர அழைப்பு விடுப்பேன்! பொன்ராஜ் தகவல்

சென்னை: அதிமுக கூட்டணியில் இருந்து விலகியுள்ள தேமுதிகவை மக்கள் நீதி மய்யம் தலைமையிலான கூட்டணியில் சேர அழைப்பு விடுப்பேன் என மநீம துணைத்தலைவர் பொன்ராஜ் கூறினார்.

தொகுதி பங்கீடு அதிருப்தி காரணமாக அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது தேமுதிக. இது தொடர்பாக கட்சித்தலைவர் விஜயகாந்த் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதைத் தொடர்ந்து இரு கட்சிகளும் இடையே வார்த்தைப்போர் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணை தலைவர் பொன்ராஜ்,  தேமுதிகவுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி கூட்டணியில் இணை ய வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். மேலும், இது தொடர்பாக, தேமுதிக துணைச்பொதுச்செயலாளர் சுதீஷ்,  பொருளாளர் பிரேமலதாவை சந்தித்து  நேரில் அழைப்பு விடுப்பேன் என்றும் தெரிவித்தார்.

அப்துல்கலாமின் அறிவியல் ஆலோசகராக இருந்து வந்த பொன்ராஜ், கடந்த சில நாட்களுக்கு முன்பு கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார். அவருக்கு துணைத்தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.