சென்னை: நான் யார் என்பது எனக்கு தெரியும்; நான் என்ன செய்கிறேன் என்பது மோடிக்கு தெரியும் என்று அதிமுகவுக்கு எஸ்.வி.சேகர் பதில் தெரிவித்து உள்ளார்.

I know who I am; Modi knows what I am doing! S.Ve.Shekarபுதிய கல்விக்கொள்கை குறித்து, தமிழகஅரசு வெளியிட்ட அறிவிப்பில், தமிழகத்தில் மும்மொழிக் கொள்கைக்கு இடம் இல்லை. இருமொழிக் கொள்கை மட்டுமே தொடரும் என தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து வீடியோ வெளியிட்ட எஸ்.வி.சேகர்,  அ.தி.மு.க. உருப்பட வேண்டுமென்றால் ஒரே ஒரு விஷயம்தான். அ.தி.மு.க. கொடியில் உள்ள அண்ணா படத்தை எடுத்துவிட வேண்டும். ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். படத்தை வைத்து அனைத்திந்திய அம்மா திராவிட முன்னேற்றக் கழகம் என்று வையுங்கள் என்று கடுமையாக விளாசியிருந்தார்.

 இதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார்,  ,  எஸ்.வி. சேகருக்கு மான, ரோஷம்  இருக்கா என்று கூறியிருந்தார். அதுபோல, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், எஸ்வி சேகர் ஏதாவது பேசி விட்டு வழக்கு என்று வந்தால் ஓடி ஒளிந்து கொள்வார் என்றும், அதனால் அவர் கேட்டதற்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவித்தார்.
இந்த நிலையில், எஸ்.வி.சேகர் தரப்பில் மீண்டும் ஒரு வீடியோ வெளியாகி உள்ளது. அதில்,  “நான் பயப்படுவன் கிடையாது. என்னை எல்லோருமே சொல்வார்கள், நீ ஒரு பிராமண சத்திரியன் என்று. எனக்கு நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். ஜான் பாண்டியன் முதல் மீனவ சங்கத் தலைவர் அன்பழகன் வரை  நிறைய பேர் இருக்கிறார்கள்.

எனக்கு பாஜக பதவிக் கொடுக்கவில்லை என்று வருத்தப்படவில்லை, . என்னைப் பொறுத்தவரை மோடி அரசாங்கத்துக்கு, ராமருக்கு அணில் மாதிரி உதவி செய்கிறேன். நான் என்ன செய்கிறேன் என்பது பிரதமர் மோடிக்கு தெரியும்.

 

நீங்கள் ஏன் பாஜக ஆதரவு பிரச்சாரத்திற்கு வரவில்லை என சில பேர் கேட்கிறார்கள். என்னை பிரச்சாரத்திற்கு கூப்பிட்டால் வரப்போகிறேன், கூப்பிடாமல் எப்படி போவது.  அடையாளமே தெரியாத யாரோ ஜீப்பில் ஏறி பேசிக்கொண்டு போவார்கள். அடையாளம் தெரிந்த நான் நோட்டீஸ் கொடுத்துக்கொண்டு பின்னால ஓட முடியுமா?

நான்  போனில் சொன்னாலே ஒரு 5 ஆயிரம் ஓட்டு  கிடைக்கும்  அளவுக்கு செல்வாக்கு எனக்கு இருக்குன்னு எனக்கு தெரியும்.  ஆகவே எந்த இடத்தில்  பேசனுமோ அங்கு பேசுவேன்.

எல்லாவற்றும் மேல் நூறு சதவீதம் நான் கடவுளை நம்புகிறேன்.  நான் பயப்படுபவன் அல்ல. பயந்தால் பொது வாழ்க் கைக்கு வர முடியாது.  என் வீடு ஐந்து முறை தாக்கப்பட்டுள்ளது. இரண்டு முறை பெட்ரோல் பாம். மூன்று முறை கல்லால் அடித்து தாக்கினார்கள். பயந்திருந்தால் முதல் தடவையே விட்டுட்டு போயிருப்பேன். நான் யார் என்பது எனக்கு தெரியும்”

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.