ஜல்லிக்கட்டை ஏன் இவ்வளவு கொண்டாடுகிறார்கள் என அறிந்துகொண்டேன் – ராகுல் காந்தி

அவனியாபுரம்:
ல்லிக்கட்டை ஏன் இவ்வளவு கொண்டாடுகிறார்கள் என அறிந்துகொண்டேன் என்று மதுரையில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

மதுரை அவனியாபுரத்தில் இன்று உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றுவருகிறது. இந்த ஜல்லிக்கட்டுப் போட்டியைக் காண்பதற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி வந்தடைந்தார்.

தொடர்ந்து பார்வையாளர்கள் மேடையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இடத்தில் உட்கார்ந்து ராகுல் காந்தி ஜல்லிக்கட்டுப் போட்டியைப் பார்த்தார்.

அந்த விழாவின்போது பேசிய ராகுல் காந்தி, ஜல்லிக்கட்டை ஏன் இவ்வளவு கொண்டாடுகிறார்கள் என இன்று அறிந்து கொண்டேன் என்றும், வருங்கால இந்தியாவுக்கு தமிழ் கலாச்சரம், மொழி முக்கியமானது. தமிழ் மொழி, கலாச்சாரம் செழிக்க பாடுபடுவர்களுக்கு வாழ்த்துகள் என்றும் கூறினார்.